சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 ஆவது ,முறையாக ஹாட்ரிக் வீழ்த்தி அசத்திய இந்திய பந்துவீச்சாளர் – விவரம் இதோ

Kuldeep-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் என்ற இமாலய ரன்குவிப்பின் மூலம் அசத்தியது.

Iyer

- Advertisement -

இந்திய அணி சார்பாக ரோஹித் மற்றும் ராகுல் சதம் விலாச, ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 43.3 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். 33வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் அந்த ஓவரின் 4 ஆவது பந்தில் 78 ரன்கள் எடுத்திருந்த சாய் ஹோப் மற்றும் 5 ஆவது பந்தில் ஜாசன் ஹோல்டர் மற்றும் கடைசி பந்தில் அல்சாரி ஜோசப் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது ஹாட்ரிக் சாதனை பதிவு செய்து சாதனை படைத்தார்.

Kuldeep

மேலும் இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் ஏற்கனவே ஒரு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் மொத்தம் 10 வரை வீசி அவர் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Advertisement