என்னை அவங்க கொஞ்சம் கூட நம்பல. என்மேல அவங்களுக்கு நம்பிக்கை இல்லயும் – இந்திய வீரர் வேதனை

Kuldeep
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்த நிலையில் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Ganguly-ipl

- Advertisement -

மேலும் இந்த தொடர் நெருங்க நெருங்க இந்த தொடர்பு குறித்த பல்வேறு கருத்துக்களை கிரிக்கெட் விமர்சகர்களும், இந்த தொடரில் விளையாடும் வீரர்கள், நிபுணர்கள் என பலரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பேசியுள்ள இந்திய அணியின் இளம் வீரரான குல்தீப் யாதவ் தனது வாய்ப்பு குறித்து பேசுகையில் : எப்பொழுதுமே ஒரு அணியின் வீரருக்கும் பயிற்சியாளருக்கும் இடையே நல்ல நெருக்கமும் தொடர்பும் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் மட்டுமே நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். ஒருவேளை அது குறைந்து விட்டால் நாம் அணியில் இல்லை என்று நினைத்து விடலாம். சில சமயங்களில் நாம் போட்டியை வென்று இருந்தாலும் நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் வெளியிலிருந்து இருப்போம். அதேபோன்று கடந்த சில ஆண்டுகளாகவே நான் அணியில் வெளியே தான் இருந்து வருகிறேன்.

kuldeep

இந்திய அணியில் கூட என்னை ஏன் களமிறக்கவில்லை என்ற விளக்கம் கொடுக்கப்படும். ஆனால் கொல்கத்தா அணியில் என்னை ஏன் விளையாட வைக்கவில்லை என்பது குறித்த தகவல் கூட எனக்கு தெரியாது. அவர்கள் என்மீது நம்பிக்கை வைக்கவில்லை மேலும் என் திறமையை அவர்கள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளவும் இல்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kuldeep-1

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தோனி இருக்கும் வரை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்றிருந்தார். அதன்பின்னர் தனது தொடர்ச்சியான சொதப்பல் காரணமாக தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement