IND vs AUS :பிட்ச்மேல குறை சொல்லி எந்த பயனும் இல்ல. மொதல்ல அதை நம்புங்க – கே.எஸ் பரத் பேட்டி

KS-Bharat
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை புதன்கிழமை மார்ச் 1-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத் அளித்துள்ள ஒரு பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அறிமுகமான கே.எஸ் பரத் இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார்.

IND vs AUS

- Advertisement -

அதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி 115 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தும் போது 22 பந்துகளில் 23 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். இதில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். சமீபத்தில் விபத்து ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் ரிஷப் பண்டிற்கு பதிலாக அணியில் இடம் பெற்றுள்ள கே.எஸ் பரத் விக்கெட் கீப்பிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் மைதானத்தின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அவர் : மைதானத்தின் மீது குறை கூறுவதற்கு இந்த டெஸ்ட் தொடர் நடக்கும் மைதானங்கள் ஒன்றும் விளையாட முடியாத அளவிற்கு மோசமாக இல்லை என்று வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : டெல்லியில் விளையாடிய போட்டி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய திட்டத்தை மிகவும் எளிமையாக வைத்துக் கொண்டேன்.

KS Bharat 1

இதில் மைதானத்தை குறித்து குறை கூறுவதில் எந்த ஒரு பயனும் கிடையாது. நம்முடைய தடுப்பாட்டத்தின் மீது நமக்கே நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த மைதானங்கள் விளையாட முடியாத அளவிற்கு எல்லாம் மோசமாக இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்முடைய தடுப்பாட்டத்தை நாம் நம்பியாக வேண்டும். அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் விளையாடினால் நிச்சயம் ரன்கள் வரும்.

- Advertisement -

“ரோஹித் பாய் இந்த இரண்டாவது போட்டியில் நான் ஆறாவது வீரராக களமிறங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். எது எப்படி இருந்தாலும் அணிக்கு நான் என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இறுதியில் வெற்றிக்கான எனது பங்களிப்பும் இருந்ததில் மகிழ்ச்சி என்று கே.எஸ் பரத் கூறினார். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் போன்ற மிகச் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட் கீப்பிங் செய்வது என்பது மிகவும் சவாலான ஒன்று.

இதையும் படிங்க : முதல்ல உங்கள காப்பாத்திக்கோங்க அப்றம் நாங்க வரோம் – பாகிஸ்தானுக்கு ஹர்பஜன் சிங் ஆதாரத்துடன் பதிலடி

ஏனெனில் அவர்கள் டாப் கிளாஸ் பவுலர்கள். எனவே அவர்களுக்கு எதிராக கீப்பிங் செய்யும் போது நிறைய நுணுக்கமான விடயங்கள் தெரிந்திருக்க வேண்டும். நான் முதல்தர போட்டிகளில் பல ஆண்டுகள் இந்தியாவில் கீப்பிங் செய்துள்ளதால் எனக்கு என் கீப்பிங்கின் மீது நம்பிக்கை உள்ளது. அதோடு இங்குள்ள மைதானங்கள் அனைத்திலும் நான் நிறைய போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளதால் கீப்பிங் பணியை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன் என கே.எஸ் பரத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement