LSG vs SRH : ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீ போட்ட ஒரு ஓவர் தான் நாங்க ஜெயிக்க காரணம் – க்ருனால் பாண்டியா பேட்டி

Krunal Pandya
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

SRH vs LSG

அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா கூறுகையில் : சன் ரைசர்ஸ் அணி விளையாடிய விதத்தை பார்க்கும்போது 200 ரன்கள் அடிப்பார்கள் என்று நினைத்தேன்.

Pooran

ஆனால் பின்பகுதியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஸ்டோனிஸ் மற்றும் பூரான் ஆகியோர் எவ்வாறு விளையாடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அது மட்டுமின்றி அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கையும் வைத்திருந்தோம்.

இதையும் படிங்க : IPL 2023 : எல்லா புகழும் சூரியாவுக்கே, கடப்பாரை பேட்டிங்கால் மிரட்டும் மும்பை – வேறு எந்த அணியும் படைக்காத மாஸ் வரலாற்று சாதனை

அந்த வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்கள் போட்டியை முடித்துக் கொடுத்தனர். குறிப்பாக அபிஷேக் சர்மா வீசிய அந்த ஒரு ஓவரின் போது ஆட்டம் முழுவதுமாக எங்கள் பக்கமாக மாறியது. அந்த ஒரு ஓவர்தான் எங்களது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement