LSG vs MI : பலம்வாய்ந்த மும்பை அணியை நாங்கள் வீழ்த்த இதுவே காரணம். வெற்றிக்கு பிறகு – க்ருனால் பாண்டியா மகிழ்ச்சி

Krunal Pandya
- Advertisement -

லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றதோடு பிளே ஆப் சுற்றிற்கான தங்களது வாய்ப்பினையும் உயிர்ப்பித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

MI vs LSG

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் லக்னோ அணியின் பேட்ஸ்மேன் ஸ்டாய்னிஸ் மிகச்சிறப்பாக விளையாடிய 89 ரன்களையும், க்ருனால் பாண்டியா 49 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது துவக்க விக்கெட்டிற்கே 90 ரன்களை சேர்த்து அருமையான தொடக்கத்தை கொடுத்திருந்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்கவே இறுதியில் மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

LSG

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய க்ருனால் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டியின் போது எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாவது பாதியில் நான் களத்திற்கு வந்தேன். எப்பொழுதுமே அணிக்காக என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியிலும் எனது பங்களிப்பை வழங்கி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. மோசின் கான் இன்று மிகச் சிறப்பாக பந்து வீசினார். ஒரு அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் வந்து தற்போது பந்து வீசிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எளிதான ஒன்று கிடையாது.

இதையும் படிங்க : MI vs LSG : கையில இருந்த மேட்சை நாங்க தோக்க இதுவே காரணம். தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்

ஏனெனில் பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெற்றியை ருசித்துள்ளோம். எங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த கடைசி போட்டியில் நாங்கள் பெற்ற இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி எனக்கு க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement