மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
என்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் இதுதான் : க்ருனால் பாண்டியா
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்களையும், ரஜத் பட்டிதார் 64 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்ததால் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய க்ருனால் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய க்ருனால் பாண்டியா கூறுகையில் :
இந்த போட்டியில் ஏதாவது ஒரு பாண்டியா வெற்றி பெற்றே ஆக வேண்டும். அந்த வகையில் நான் எனது அணியின் வெற்றியை முக்கியமாக கருதுகிறேன். ஆனாலும் ஹார்டிக் பாண்டியா மிகச்சிறப்பாக விளையாடினார். அவரை நினைத்தால் சற்று வருத்தமாக தான் இருக்கிறது. என்னுடைய பந்துவீச்சை பொறுத்தவரை நான் மும்பை வான்கடே மைதானத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியுள்ளேன்.
இதையும் படிங்க : இந்த ஆட்டநாயகன் விருது அவங்களுக்கு தான் கொடுக்கனும்.. மும்பையை சாய்க்க இதான் காரணம்.. படிதார் பேட்டி
இங்கு எப்படி பந்து வீசினால் சரியாக இருக்கும் என்பதை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டேன். அதை வைத்து தான் இன்று பந்து வீசினேன். அதேபோன்று ஆன்டி பிளவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அவருடைய அறிவுரைகளும் என்னை சிறப்பாக வழி நடத்துகிறது என க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



