இந்த ஆட்டநாயகன் விருது அவங்களுக்கு தான் கொடுக்கனும்.. மும்பையை சாய்க்க இதான் காரணம்.. படிதார் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற்ற 20வது போட்டியில் மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பெங்களூரு 20 ஓவரில் 221-5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 67, கேப்டன் ரஜத் படிதார் 64, ஜிதேஷ் சர்மா 40* தேவ்தூத் படிக்கல் 37 ரன்கள் எடுத்தனர்.

மும்பைக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்டிக் பாண்டியா 2, ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா 17, ரிக்கல்டன் 17 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்ததாக வில் ஜேக்ஸ் 22, சூரியகுமார் 28 ரன்களில் விக்கெட்டை இழந்து பின்னடைவைக் கொடுத்தனர்.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:

அதே போல மிடில் ஆர்டரில் திலக் வர்மா 56, கேப்டன் பாண்டியா 42 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 209-9 ரன்களை மட்டுமே எடுத்த தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து மும்பையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த பெங்களூருவுக்கு அதிகபட்சமாக யாஷ் தயாள் 2, க்ருனால் பாண்டியா 4, ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் படிதார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இந்த ஆட்டநாயகன் விருது தங்களுடைய பவுலர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று படிதார் கூறியுள்ளார். இது பற்றிய அவர் பேசியது பின்வருமாறு. “இது அற்புதமான போட்டி. எங்களுடைய பவுலர்கள் தைரியத்தை காட்டியது சிறப்பாக இருந்தது. உண்மையில் இந்த விருது எங்களுடைய பவுலிங் துறைக்கு தான் செல்ல வேண்டும்”

- Advertisement -

தைரியமான பவுலிங்:

“ஏனெனில் இந்த மைதானத்தில் எதிரணி பேட்டிங் துறையை நிறுத்துவது மிகவும் கடினம். எனவே எங்களது பவுலர்களுக்கு பாராட்டுக்கள் செல்ல வேண்டும். எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. க்ருனால் பாண்டியா அபாரமாக பௌலிங் செய்தார். கடைசி ஓவரை பவுலிங் செய்வது கடினமானது. ஆனால் அங்கே அவர் மிகவும் தைரியத்துடன் சிறப்பாக பௌலிங் செய்தார்”

இதையும் படிங்க: 12 ரன்ஸ்.. சிஎஸ்கே போலவே மும்பையை கோட்டையில் சாய்த்த ஆர்சிபி.. 10 வருடம் கழித்து சாதனை வெற்றி

“நாங்கள் போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல விரும்பினோம். அதனால் க்ருனால் பாண்டியா கடைசி ஓவரை வீச வேண்டும் என்று பேசி முடிவு செய்தோம். பிட்ச் நன்றாக இருந்ததால் பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது. ஹர்டிக் பாண்டியா விக்கெட் விழுந்ததும் எதிரணியை ஆல் அவுட் செய்ய விரும்பினோம். மணிகட்டு ஸ்பின்னர்கள் எங்களுடைய ஒரு முக்கியமான பவுலர்கள். ஏனெனில் அவர்கள் விக்கெட் எடுக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. சுயஸ் பவுலிங் நன்றாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement