என்னை ஏலத்தில் நம்பி வாங்கினால் 100% மேட்ச்களை வின் பண்ணி தருவேன் – மும்பை வீரர் உறுதி

MI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு இம்முறை மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது.

Ganguly-ipl
IPL MI

பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் நடைபெறும் இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்ற உள்ளார்கள். இதில் தங்களுக்கு தேவையான தரமான வீரர்களை கண்டறிந்து பல கோடி ரூபாய்களை செலவழித்து வாங்க ஐபிஎல் 2022 கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் தயார் நிலையில் உள்ளன.

- Advertisement -

பாண்டியா சகோதரர்கள்:
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய முதுகெலும்பு வீரர்களாக விளையாடி வந்த பாண்டியா சகோதரர்களை அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. கடந்த 2016 முதல் மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளில் பங்காற்றியதால் 2021 சீசன் வரை இவர்களைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்திருந்தது.

இந்த காலகட்டங்களில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராகவும் பினிஷெராகவும் ஹர்திக் பாண்டியா பட்டையை கிளப்ப சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக க்ருனால் பாண்டியா அசத்தினார். இந்த காலகட்டங்களில் ரோகித் சர்மா தலைமையில் அசத்திய இவர்கள் 3 முறை சாம்பியன் பட்டங்களையும் அந்த அணிக்காக வென்றுள்ளார்கள். அதன் காரணமாக இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பையும் இவர்கள் பெற்றார்கள்.

- Advertisement -

குஜராத் கேப்டன் ஹர்டிக்:
அப்படிபட்ட இவர்களை இம்முறை மெகா ஏலம் வருவதால் வேறு வழியின்றி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விடுவித்தது. இதில் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவை ஏலத்துக்கு முன்பாகவே 15 கோடிகள் கொடுத்து அள்ளிய புதிய அஹமதாபாத் ஐபிஎல் அணி நிர்வாகம் இந்த சீசனில் தங்கள் அணியின் கேப்டனாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள குஜராத் அணிக்கு முதல் முறையாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளார்.

Pandya

மறுபுறம் 84 போட்டிகளில் விளையாடி 1143 ரன்களையும் 51 விக்கெட்டுகளையும் எடுத்த க்ருனால் பாண்டியா மெகா ஏலத்தில் 2 கோடி ரூபாய் பிரிவில் பங்கேற்க உள்ளார். கடந்த வருடம் 8.8 கோடி ரூபாய்களுக்கு மும்பை அணிக்காக விளையாடி ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக இருக்கும் இவர் ஏலத்தில் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நம்பி வாங்குங்க:
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் தன்னை நம்பி வாங்கினால் 100% வெற்றிக்காக பாடுபடுவேன் என க்ருனால் பாண்டியா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “க்ருனால் பாண்டியா உங்களுக்காக 100% வெற்றிகளை பெற்று தருவார். அதற்காக நான் ஒன்றும் ஓவர் கான்பிடென்ட்டாக இல்லை. நான் எப்போதும் தன்னம்பிக்கை கொண்டவனாக இருக்கிறேன். மேலும் எப்போதுமே நான் கோப்பையை வெல்வதற்காகவே விளையாடுவேன்” என கூறியுள்ளார்.

Krunal

தனது சகோதரர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாட விருப்பமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு க்ருனால் பாண்டியா கூறியது பின்வருமாறு. “அவருக்கு (ஹர்டிக் பாண்டியா) நான் தேவையா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவர் என்னை அவர் அணியில் விளையாட ஐபிஎல் ஏலம் வாயிலாக தேர்வு செய்யலாம் அல்லது எந்த அணிக்காக விளையாட நான் ஒப்பந்தமானாலும் அதில் மகிழ்ச்சியே. அவருக்கு (ஹர்டிக் பாண்டியா) அனைத்து தகுதியும் உள்ளது.

இதையும் படிங்க : இவங்க 2 பேரோட ஆட்டம் தான் இரண்டாவது போட்டியின் வெற்றிக்கு காரணம் – ரோஹித் பெருமிதம்

குறிப்பாக மும்பை மற்றும் இந்தியாவுக்காக அவர் விளையாடிய போது தன் மீதான தன்னம்பிக்கையில் தலைவராக இருந்தார். அவருக்கு கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏனெனில் இனி அவரின் கேப்டன்ஷிப் திறமையை அனைவராலும் பார்க்க முடியும். அவருக்கு கேப்டனாக செயல்படும் அனைத்து தகுதிகளும் உள்ளது. எனவே அவர் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்படுவதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement