என்னால் முடியாதப்போ.. இதை சொல்லி அடிக்க வெச்ச விராட் கோலியை பாராட்டுங்க.. ஆட்டநாயகன் க்ருனால் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 46வது போட்டி நடைபெற்றது. அதில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி சாய்த்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அபிஷேக் போரேல் 28, கேஎல் ராகுல் 41, ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்த உதவியுடன் 163 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணியும் ஜேக்கப் பேத்தல் 12, படிக்கல் 0, கேப்டன் ரஜத் படிதார் 6 ரன்னில் அவுட்டானதால் 26/3 என ஆரம்பத்திலேயே திணறியது. ஆனால் அப்போது விராட் கோலி நங்கூரமாக விளையாடி 51 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ருனால் பாண்டியா 73* (47) ரன்கள் விளாசி அசத்தினார்.

- Advertisement -

ஆட்டநாயகன் க்ருனால்:

இறுதியில் டிம் டேவிட் 19* (5) ரன்கள் எடுத்ததால் 18.3 ஓவரிலேயே எடுத்த பெங்களூரு தங்களுடைய 7வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்துப் போராடியும் டெல்லி 3வது தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய க்ருனால் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் பேட்டிங்கில் முதல் 20 பந்துகளில் தம்மாலும் நன்றாக விளையாட முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். அப்போது உன்னால் இதை செய்ய முடியும் என்று உத்வேகத்தை கொடுத்த விராட் கோலிக்கு பாராட்டு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றியைப் பெறுவது எப்போதும் நல்லது. சில நேரங்களில் நீங்கள் கடினமான உழைப்பைப் போட்டால் அது நல்ல முடிவைக் காட்டும்”

- Advertisement -

கோலிக்கு பாராட்டு:

“அது நல்ல உணர்வையும் கொடுக்கும். என்னுடைய வேலை தெளிவானது. அதாவது 3 விக்கெட்டுகளை நாங்கள் இழந்தால் நான் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். ஏனெனில் எங்களிடம் லோயர் ஆர்டரில் டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா போன்ற ஹிட்டர்கள் இருக்கிறார்கள். விராட் கோலி போன்றவர் எதிரே இருக்கும் போது பேட்டிங் ஈசியாக இருக்கும். நான் அவருக்கு பாராட்டுக்கள் கொடுப்பேன்”

இதையும் படிங்க: 26/3 டூ 165/4.. கிங் கோலியுடன் சேர்ந்து டெல்லியை சாய்த்த பாண்டியா.. ஆர்சிபி யாருமே செய்யாத சரித்திரசாதனை

“ஏனெனில் முதல் 20 பந்துகளில் நான் தடுமாற்றமாக விளையாடினேன். அப்போது உன்னால் இதை செய்ய முடியும் என்று சொன்ன அவர் தொடர்ந்து என்னைத் தள்ளினார். இது எனக்கு 10வது ஐபிஎல் தொடர். நான் எப்போதும் எக்கனாமிக்கல் பவுலராக செயல்பட்டு வருகிறேன். என்னுடைய வேரியேஷன்கள் மீது வேலை செய்து வருகிறேன். எனது தலையை கீழே வைத்து தொடர்ந்து இதைத் தொடர விரும்புகிறேன். ஐபிஎல் போன்ற தொடர்களில் பேட்ஸ்மேன்கள் பயமின்றி விளையாடுகிறார்கள். எனவே ஸ்பின்னராக நீங்களும் ஒரு படி முன்னே சென்று பவுன்ஸ் பந்துகளை வீச வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement