பேட்டியின் போது பேசமுடியாமல் அழுதபடி வெளியேறிய க்ருனால் பாண்டியா – அவரின் அழுகைக்கு காரணம் இதுதான்

Krunal
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது.

Krunal

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அணியின் முக்கிய தருணத்தில், இக்கட்டான இறுதி நேரத்தில் அறிமுக வீரரான க்ருனால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார். அறிமுக போட்டியில் விளையாடிய க்ருனால் பாண்டியா நேற்றைய போட்டியில் எந்தவித பயமுமின்றி இங்கிலாந்து வீரர்களை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 31 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.

அதுமட்டுமின்றி அறிமுக போட்டியிலேயே 26 பந்துகளில் அரைசதம் கடந்து அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் நேற்றைய இவரின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு போட்டியின் இடையே இவரை வர்ணனையாளர்கள் பேட்டி கண்டனர். மேலும் இந்த சிறப்பான ஆட்டத்தை யாருக்கு டெடிகேட் செய்கிறீர்கள் என்பது போலவும் கேள்விகள் அமைந்தன.

Krunal

அப்போது தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய க்ருனால் பாண்டியா “இந்த ஆட்டம் என்னுடைய தந்தைக்காக, என்னுடைய ஒருநாள் அறிமுக தொப்பியை பெற்ற போது நான் மிகவும் எமோஷனல் ஆகிவிட்டேன்” என்றும் கூறி அழ ஆரம்பித்து விட்டார். மேலும் தொடர்ந்து பேச முடியாமல் சிரமப்பட்ட அவர் அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறி விட்டார்.

Krunal 1

இதற்கு காரணம் யாதெனில் சமீபத்தில்தான் க்ருனால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் தந்தை மரணம் அடைந்தார். தனது அறிமுக ஒருநாள் போட்டியை அவரால் பார்க்க முடியவில்லையே என்பதை நினைத்து க்ருனால் பாண்டியா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். மேலும் தன் தொப்பியை வாங்கிய போதும், அரைசதத்தை கடந்த போதும் வானை நோக்கி தனது மகிழ்ச்சியை தந்தைக்காக அவர் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement