கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று (மே 27) நடைபெறவுள்ள இறுதி போட்டியில் சென்னை மற்றும், ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த தொடரின் துடைக்க விழா போலவே, இறுதிப்போட்டியையும் சற்று கோலாகலமாக முடிக்க திட்டமிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
இந்த தொடக்க விழாவில் நடிகை தமன்னா, வருண் தவான், ஜாகுலின் பெர்னாண்டஸ், பரினீதி சோப்ரா போன்ற பல நடிகர் நடிகைகள் பங்குபெற்று நடனமாடினார். இந்த விழாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகை தமன்னாவிற்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி போட்டியின் நிறைவு விழாவில் பாலிவுட் நடிகைகள் ஜாகுலின் பெர்னாண்டஸ், கத்ரீனா கைப் போன்ற நடிகைகள் நடனமாட போவதாக தெரிகிறது. இந்த விழாவில் நான்மட்டுவதற்காக நடிகை ஜாகுலின் பெர்னாண்டஸ் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
இன்று நடக்கவுள்ள இறுதி போட்டியில் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்குமா. அல்லது இந்த ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட சென்னை அணியுடன் வெற்றி பெற்று தனது வங்கத்தை தீர்க்குமா ஹைதராபாத் அணி என்று பொறுத்திருந்து பார்ப்போம்