தோனிக்கு இதெல்லாம் கைவந்த கலை. அதனால எனக்கு எந்த பிரஷரும் இல்ல – கிருஷ்ணப்பா கவுதம் மகிழ்ச்சி

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடர் என்று வந்து விட்டாலே பட்டையை கிளப்பும் என்கிற எண்ணத்தை எல்லோர் மத்தியிலும் இருந்து சென்ற வருடம் அது அழிந்துவிட்டது. ஏனென்றால் சென்னை அணி ஒவ்வொரு வருடமும் நன்றாக விளையாடி ப்ளே ஆப்ஸ் சுற்றுக்காவது குறைந்தபட்சம் தகுதி அடைந்துவிடும். ஆனால் சென்ற வருடம் 14 போட்டிகளில் வெறும் 6 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று , 12 புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் தொடரை சென்னை அணி முடித்தது.

- Advertisement -

இதனால் இந்த வருடம் மிகசிறந்த அளவில் கம்பேக் கொடுத்து நன்றாக விளையாடி கோப்பையை கைப்பற்ற சில வாரங்களுக்கு முன்பே வலைப்பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பித்துவிட்டது. இதில் இந்த ஆண்டு புதிதாய் களமிறங்க உள்ள கிருஷ்ணப்பா கவுதம் மகேந்திர சிங் தோனி பற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பற்றியும் சில வார்த்தைகள் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் வெறும் 20 லட்சத்திற்கு அடிப்படைத் தொகையாக கொண்டிருந்த கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. கிருஷ்ணப்ப கௌதம் இதுவரை சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடாத நிலையில் , இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் சென்னை நிர்வாகம் ஒரு விஷயத்தை மேற்கொள்கிறது என்றால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்பதை புரிந்துகொண்ட வல்லுனர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் , கௌதமை ஏலத்தில் வாங்கியதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

krishnappa gautham 2

பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கௌதம் , நான் இங்கே எந்தவித அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை. இங்கே மிகவும் சந்தோசமாக எனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். சென்னை அணி நிர்வாகம் உண்மையாக மிக அற்புதமான நிர்வாகம். வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது சென்னை அணி நிர்வாகத்துக்கு நன்றாக தெரிந்திருக்கிறது என்று கூறினார்.
தோனி பற்றி பேசிய கிருஷ்ணப்ப கௌதம் , மகேந்திர சிங் தோனி ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல் சக வீரர்கள் எல்லோரிடமும் மிக சகஜமாக பழகுவார்.

krishnappa gautham 1

தனக்கு கீழ் விளையாடும் வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனித்து அவர்களிடமிருந்து எப்படி தனக்குத் தேவையானதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை பொறுத்தவரையில் மிக தெளிவாக இருப்பார்.அதைப்போல வீரர்களின் தவறுகளை புண்படும் வகையில் அல்லாமல் மிக பொறுமையாக அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை அழகாக விளக்குவார்.ஒரு கேப்டனிடம் இது நிச்சயம் இருக்க வேண்டும் அது தான் தோனியிடம் இருக்கிறது என்று தோனியை பற்றி புகழ்ந்து கிருஷ்ணப்ப கௌவுதம் கூறினார்.

Advertisement