கோலி, ரோஹித், தோனி மூனு பேருல யாரு பெஸ்ட் கேப்டன். சரியான பதிலை கொடுத்த – இந்திய வீரர்

IND-2
- Advertisement -

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது. இந்திய அணியை சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த தோனி மற்றும் கோலி ஆகியோர் சென்னை மற்றும் பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருக்கின்றனர். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை பெற்ற ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஒருமுறைகூட கோப்பையை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த மூவரில் யார் சிறந்த கேப்டன் என்று முன்னாள் கர்நாடக வீரர் கிருஷ்னப்பா கவுதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : புள்ளிவிவரப்படி பார்த்தோமானால் விராட் கோலியைவிட ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார். நான்கு முறை கோப்பையை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். ஆனால் மூவரில் யார் சிறந்த கேப்டன் என்று பார்த்தால் அது தோனி தான். அதிக முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு வழி நடத்திச் சென்றுள்ளார் .

மேலும் மூன்று முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதனால் இந்த மூவரில் தோனிதான் மிகச் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார் கிருஷ்னப்பா கவுதம். 2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற போது அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளராக கிருஷ்னப்பா கவுதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dhoni

கிருஷ்ணப்பா கவுதமின் இந்த சாமர்த்தியமான பதிலுக்கு ரசிகர்களும் ஆமோதித்துள்ளனர். சென்னை அணி கலந்துகொண்ட அனைத்து ஐ.பி.எல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐ.சி.சி நடத்திய அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக தோனி திகழ்கிறார்.

Advertisement