இலங்கை தொடரில் ஒரு போட்டியில் கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்காது – சி.எஸ்.கே வீரர் ரொம்ப பாவம்

dhawan

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை மறுதினம் ஜூலை 18-ஆம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைகளுக்குப் பிறகு இலங்கை சென்று அடைந்து தற்போது பயிற்சியை முடித்துள்ளது.

INDvsSL

இந்நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புகையில் அந்த அணியின் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் தற்போது இலங்கை அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது பயிற்சியை முடித்து உள்ள இந்திய அணி இலங்கை தொடரில் பங்கேற்க தயாராக உள்ளது. இந்த அணியில் அறிமுக வீரர்களாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்களுக்கு போட்டியில் விளையாடும் வாய்ப்பு என்பது சற்று அரிதான ஒன்றுதான்.

ind

அந்த வகையில் இந்தத் தொடர் முழுவதுமே வாய்ப்பு கிடைக்காத கிடைக்காது என்று கூறப்படும் ஒரு வீரரும் இந்திய அணியில் இருக்கிறார். இந்த 20 பேர் கொண்ட அணியில் 32 வயதான சிஎஸ்கே அணியின் வீரரான கிருஷ்ணப்பா கவுதம் இடம் பெற்றாலும் அவர் எந்த ஒரு டி20 போட்டியிலும், ஒருநாள் போட்டியிலும் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அணியில் ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதாலும், ஆல்ரவுண்டர் வரிசையில் ஹார்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர் இருப்பதனாலும் நிச்சயம் கிருஷ்ணப்பா கவுதமுக்கும் வாய்ப்பே கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அது மட்டுமின்றி அவர் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை என்ற காரணத்தினால் இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு அறிமுகம் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement