இந்த இலங்கை தொடரோடு இந்த சி.எஸ்.கே வீரரின் கட்டம் முடிந்தது – இனி இவர் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பில்லை

IND
- Advertisement -

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை முதல் நடைபெற இருக்கிறது.

INDvsSL-1

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இந்திய வீரர்கள் இடம் பிடித்தனர். மேலும் மூன்றாவதாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கி விளையாடினர். இந்நிலையில் இந்திய அணியில் விளையாடும் சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு இனி மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் ஆகியுள்ளது.

அதன்படி கடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமான கிருஷ்ணப்பா கவுதம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தேர்வாகி இருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடிய ஆட்டத்தை வைத்து இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

Gowtham

3-வது ஒருநாள் போட்டியின்போது பேட்டிங்கில் 3 பந்துகளை சந்தித்து 2 ரன்களை மட்டுமே குவித்த அவர் அதுமட்டுமின்றி ஆல்-ரவுண்டராக பவுலிங்கில் 8 ஓவர் வீசி 49 ரன்கள் கொடுத்து விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இப்படி அவரது ஆட்டம் சர்வதேச தரத்தில் சற்று மந்தமாகவே உள்ளதால் அவர் அணியிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.

Gowtham-2

மேலும் 32 வயதான ஆல்ரவுண்டர் ஆன இவருக்கு வாய்ப்பு அளிப்பதைவிட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே அணி நிர்வாகம் நினைக்கும் என்பதால் இனி அவர் அணியில் தேர்வாக வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement