தனது டி20 உ.கோ 11 பேர் இந்திய அணியை தேர்வு செய்த ஸ்ரீகாந்த் – டிகேவுக்கு இடம் இருக்கா? முழுவிவரம் இதோ

Srikkanth
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் களமிறங்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் ஷமி, தீபக் சஹர் ஆகியோர் ஸ்டாண்ட் பை லிஸ்டில் சேர்க்கப்பட்டதும் வாய்ப்புக்காக எங்கும் சஞ்சு சாம்சனுக்கு பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டதும் நிறைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் நிறைய தடைகளையும் சவால்களையும் விமர்சனங்களையும் கடந்து இந்த உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக செயல்பட்ட அவரின் இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர்.

Dinesh-Karthik

- Advertisement -

ஆனால் டி20 கிரிக்கெட்டில் தம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் 2022 தொடரில் அதிரடியாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவர் அதன்பின் பங்கேற்ற தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 37 வயதுக்குப் பின் 2 ஆட்டநாயகன் விருதையும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அந்த வகையில் வயதை வெறும் நம்பராக்கி லட்சிய பயணத்தில் சாதித்துள்ள தினேஷ் கார்த்திக்க்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று மேலும் சாதிக்க அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீகாந்த் அணி:
முன்னதாக சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஃபினிஷிங் செய்யக் கூடியவர் என்பதால் அந்த வேலைக்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என்று சமீபத்திய ஆசிய கோப்பையின் போது முன்னாள் தமிழக இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் தன்னுடைய 11 பேர் இந்திய அணியை தேர்வு செய்துள்ள அவர் தன்னுடைய பழைய கருத்தில் கொஞ்சமும் பின்வாங்காமல் அந்த அணியில் தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்டு ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளது நிறைய தமிழக ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Srikkanth

இது பற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பிரிஸ்பேன், மெல்போர்ன், சிட்னி அல்லது பெர்த் என எங்கு விளையாடினாலும் என்னுடைய 11 பேர் அணி ஒன்றாகத்தான் இருக்கும். அதில் முதல் போட்டியில் கேஎல் ராகுல் ரோஹித் சர்மா ஆகியோருடன் 3வது இடத்தில் விராட் கோலி 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் ஹர்திக் பாண்டியா 6வது இடத்தில் ரிஷப் பண்ட் 7வது இடத்தில் அஷ்வின் 8வது இடத்தில் சஹால் மற்றும் 9, 10, 11 ஆகிய இடங்களில் முறையே புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல்” ஆகியோர் இருப்பார்கள் என்று கூறினார்.

- Advertisement -

பதான் அணி:
அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தன்னுடைய அணியில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை முதல் போட்டியில் நீங்கள் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை விளையாட வேண்டும். அந்த வகையில் என்னுடைய அணியில் ரோகித், ராகுல் ஆகியோருடன் 3வது இடத்தில் விராட் கோலி 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் தீபக் ஹூடா 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா 7வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருப்பார்கள். 8வது இடத்தில் லெக் ஸ்பின்னராக சஹாலும் 9 முதல் 11 ஆகிய இடங்களில் முறையே ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இருப்பார்கள். இந்த வகையில் உங்களிடம் 3 தரமான வேகப்பந்து பந்து வீச்சாளர்கள் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்களாக இருப்பர்” என்று கூறினார்.

Irfan-pathan

இப்படி வட மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பு கொடுக்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் தமிழரான தினேஷ் கார்த்திக்கும் வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணிப்பது நிறைய தமிழக ரசிகர்களை அதிருப்தியடைய வைக்கிறது. இந்த அணி ஆஸ்திரேலியாயாவுக்கு சென்று விளையாட போவதில்லை என்ற நிலைமையில் பெயருக்காகவாவது தினேஷ் கார்த்திக்கை சேர்த்திருக்கலாமே என்பது தான் நிறைய ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

Advertisement