போட்டு குழப்பாதிங்க, 2023 உ.கோ வெல்ல ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்ததும் அதை செய்ங்க – தேர்வு குழுவுக்கு ஸ்ரீகாந்த் கோரிக்கை

Srikkanth
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2013ஆம் சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்றது. அதன் பின் நிறைய தரமான வீரர்கள் இருந்தும் எந்த ஐசிசி கோப்பையும் வெல்ல முடியாமல் சந்தித்துள்ள விமர்சனங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று முற்றுப்புள்ளி வைக்க இந்திய கிரிக்கெட் அணி போராட உள்ளது. மேலும் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையில் சொந்த மண்ணில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது போலவே 2015இல் ஆஸ்திரேலியாவும் 2019இல் இங்கிலாந்தும் சொந்த மண்ணில் கோப்பையை வென்றன.

IND

- Advertisement -

எனவே எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா அந்த வரிசையில் இம்முறை கோப்பையை வெல்லுமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அதற்கு தரமான வீரர்களை கண்டறியும் சோதனை, சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து புத்துணர்ச்சியுடன் விளையாட வைக்கும் அணுகுமுறை போன்ற இந்திய அணி நிர்வாகம் கடைபிடிக்கும் சில சொதப்பலான முடிவுகளை மூட்டை கட்ட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நிலையான கேப்டன் தலைமையில் முக்கிய வீரர்கள் தொடர்ந்து விளையாடி ஒரு அணியாக இணைந்து செட்டிலானால் தான் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்ல முடியும்.

ஸ்ரீகாந்த் கோரிக்கை:
ஆனால் இந்திய அணியிலோ 9 மாதங்கள் இளம் வீரர்கள் விளையாடுவதும் உலகக்கோப்பை நடைபெறும் மாதத்தில் மட்டும் முதன்மை வீரர்கள் விளையாடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் உலகக்கோப்பையில் விளையாடும் 15 வீரர்களை வரும் பிப்ரவரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்குப்பின் இறுதிச் செய்ய வேண்டுமென்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் 2011 உலக கோப்பை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

IND

அதை விட்டு விட்டு கடந்த வருடம் இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு ஆசிய கோப்பை வரை காத்திருந்து 2022 டி20 உலக கோப்பையில் சொதப்பியதை போல் இப்போதும் சொதப்ப வேண்டாம் என்று தேர்வுக்குழுவுக்கு கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “என்னை பொறுத்த வரை ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் இதுதான் என்னுடைய சிறந்த அணி என்ற முடிவை நான் எடுப்பேன். ஒருவேளை நான் இந்திய தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால் இது தான் என்னுடைய 15 பேர் அணி என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானித்து விடுவேன்”

- Advertisement -

“மேலும் அவர்களுடைய ஃபார்மை ஐபிஎல் தொடரில் பார்த்து விட்டு அதன் பின் ஒரு சில சிறிய மாற்றங்களை மட்டுமே செய்வேன். அதை விட்டு விட்டு ஆசியக் கோப்பை வரை காத்திருந்து “ஆசிய கோப்பைக்கு பின் சிறந்த அணியை தேர்வு செய்யப் போகிறேன்” என்று சொல்ல மாட்டேன். அது சரியான அணுகு முறையும் கிடையாது. என்னை கேட்டால் ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் உலக கோப்பையில் விளையாடப் போகிறார்கள் என்று கருதும் வீரர்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி உங்களுடைய பார்மை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவேன்”

SRIKKANTH

“அத்துடன் உலக கோப்பையில் விளையாடப் போகும் நீங்கள் உங்களை புத்துணர்ச்சியுடன் நல்ல உடல் தகுதியுடன் வைத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லி விடுவேன். எனவே நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் உலகக்கோப்பை வெல்லும் அணியை அவ்வாறு தான் தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல காயமடைந்திருந்த ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தற்போது குணமடைந்து அடுத்ததாக நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிங்கபாகிஸ்தானை அப்றம் பாத்துக்கலாம், ஒரே குரூப்பில் இந்தியா – பாக், 2023 – 24 ஆசிய கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்ட ஜெய் ஷா

எனவே அதிலிருந்து அவர்கள் தொடர்ந்து விளையாடுவதுடன் அடுத்து வரும் தொடர்களில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களையும் கண்டறிந்து ஆஸ்திரேலிய தொடருக்க்குப் பின் இறுதி கட்ட அணியை தேர்வு செய்வதே வெற்றியின் முதல் படியாகும். அதை விட்டுவிட்டு கடைசி வரை காத்திருந்து குழப்பிக்கொண்டு மாற்றங்களை செய்து சொதப்பலான அணியை தேர்ந்தெடுப்பது எந்த வகையிலும் வெற்றியை கொடுக்காது என்றே கூறலாம்.

Advertisement