பாகிஸ்தானை அப்றம் பாத்துக்கலாம், ஒரே குரூப்பில் இந்தியா – பாக், 2023 – 24 ஆசிய கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்ட ஜெய் ஷா

Jay Shah IND vs PAk
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் மோதிய இவ்விரு அணிகளும் 2023இல் அதே போலவே மோதுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில் கடந்த 2022 ஜூன் மாதம் வாக்கில் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் 2023 ஆசிய கோப்பை நடத்தும் உரிமையை இதர உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் பாகிஸ்தான் வாங்கியது.

ஆனால் அடுத்த சில மாதங்களில் பிசிசிஐ செயலாளராகவும் இருக்கும் ஜெய் ஷா எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு பயணித்து 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்றும் அந்தத் தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் வாரியம் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் அவர் இப்படி பேசியதை எதிர்பார்க்கவில்லை என்று பதிலடி கொடுத்தது.

- Advertisement -

ஆசிய அட்டவணை:
அதை விட எங்கள் நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு வராமல் போனால் அதே 2023இல் உங்கள் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கு நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடியான அறிவிப்பையும் பாகிஸ்தான் வெளியிட்டது. அதை உறுதிப்படுத்திய ரமீஸ் ராஜா நாங்கள் பங்கேற்காத 2023 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்றால் அதை யார் பார்ப்பார்கள் என்று விமர்சித்தார்.

இருப்பினும் தற்போது அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் புதிய தலைவர் நஜாம் சேதி தலைமையிலான பாகிஸ்தான் வாரியம் இந்தியாவுடன் சமூகமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் 2023 ஆசிய கோப்பை விவகாரத்தை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் தற்போது 2023 – 24 காலகட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களுக்கான அட்டவணையை அதன் தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“2023 & 2024க்கான ஆசிய கிரிக்கெட்டின் பாதை அமைப்பு மற்றும் காலெண்டர்களை வழங்குகிறோம். இந்த விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான எங்களின் இணையற்ற முயற்சிகள் மற்றும் ஆர்வத்தை இது குறிக்கிறது. நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு தயாராகி வருவதால் இது கிரிக்கெட்டுக்கு நல்ல நேரம் என உறுதியளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2023 ஆசிய கோப்பைக்கான அட்டவணையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. 3வது அணி தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். மற்றொரு பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. அந்த வகையில் மொத்தம் 6 அணிகள் 13 போட்டிகளில் ஆசிய கோப்பைக்காக பலபரிட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

அந்த தொடர் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போலவே லீக் சுற்று, சூப்பர் 12 சுற்று ஆகிய வடிவத்தில் நடைபெறும் என்று எதிர்பார்த்து படுகிறது. இருப்பினும் அந்தத் தொடர் எங்கு நடைபெறும் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. எனவே அதைப் பற்றிய இறுதி முடிவு வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்கவீடியோ : ப்ராட்மேனை மிஞ்சி நவீன ஜாம்பவானாக ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை – ஓய்வின்றி தெ.ஆ’வை வெளுக்கும் ஆஸ்திரேலியா

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அட்டவணையின் படி 2023 – 24 காலகட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மொத்தம் 145 வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. அதில் இந்த வருடம் 75 போட்டிகளும் அடுத்த வருடம் 70 போட்டிகளும் நடைபெறுகின்றன. மேலும் இந்த காலகட்டத்தில் மகளிர் ஆசிய கோப்பை, ஆடவர் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை போன்ற முக்கிய தொடர்களும் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Advertisement