- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஃபார்மில் இல்லாத கில் எதற்கு? 500 ரன்ஸ் அடிச்ச அவரை ஏன் எடுக்கல.. ஒருதலைபட்ச தேர்வுக்குழுவை விளாசும் ஸ்ரீகாந்த்

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் சூரியகுமார் யாதவ், விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சிவம் துபே போன்ற இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இருப்பினும் இந்த அணியில் தமிழ்நாட்டில் இருந்து நடராஜன் போன்ற யாருமே தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்தியாவுக்காக அறிமுகமாகி அற்புதமாக செயல்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் 2024 ஐபிஎல் தொடரில் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. அந்த காரணத்திற்காக அவர் கழற்றி விடப்பட்டதற்கு நிறைய எதிர்ப்புகள் காணப்படுகிறது.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:
குறிப்பாக சர்வதேச போட்டிகளில் நன்றாக விளையாடிய ரிங்கு சிங் பலிகிடாவாக கழற்றி விடப்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் சுமாரான ஃபார்மில் தவிக்கும் சுப்மன் கில் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படவில்லை என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

எனவே அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக விமர்சித்துள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் முழுமையாக ஃபார்மில் இல்லை. ஆனால் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஏற்கனவே இந்தியாவுக்காக 17 இன்னிங்ஸில் 500 ரன்கள் அடித்துள்ளார்”

- Advertisement -

“மேலும் கடந்த வருடத்தின் இறுதியில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்தார். ஆனால் சுப்மன் கில் தேர்வுஜ் குழுவுக்கு மிகவும் பிடித்தவர். அதனால் சுமாராக செயல்பட்டாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான அணியிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும். அந்த வகையில் இந்திய அணியின் தேர்வு ஒருதலைபட்சமாக இருக்கிறது”

இதையும் படிங்க: நாங்க பண்ண இந்த ஒரு தப்பால தான் பஞ்சாப் அணிக்கெதிராக தோல்வியை சந்தித்தோம் – ஒப்புக்கொண்ட ருதுராஜ்

“இந்திய அணியின் தேர்வு என்பதே பாரபட்சமாக இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல சுமாரான ஃபார்மில் இருந்தாலும் முகமது சிராஜ் நட்சத்திர அந்தஸ்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழக வீரர் நடராஜன் நல்ல ஃபார்மில் இருந்தும் நட்சத்திர அந்தஸ்து இல்லாததால் கழற்றி விடப்பட்டுள்ளார். அதனால் இந்திய அணியின் தேர்வில் பல ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -