சச்சின் கடைசியாக அவுட் ஆகி பேசியதும் நாங்கள் இருவரும் அழுதுவிட்டோம் – மே.இ வீரர் பகிர்ந்த உருக்கமான தகவல்

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டுக்காக 24 வருடங்கள் உழைத்தவர் சச்சின் டெண்டுல்கர். 1989ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக விளையாடியவர். 200 டெஸ்ட் போட்டிகளிலும் 463 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 35,000 சர்வதேச ரன்களை குவித்தவர். 2013ம் ஆண்டு வான்கடே மைதானத்தில் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்குப் பின்னர் தனது நீண்ட நெடிய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி சோகம் கலந்த சந்தோஷத்தில் பேசிக்கொண்டிருந்தார். இந்த உரை மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த உரையை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கண் கலங்கினர்.

குறிப்பாக அந்த களத்தில் நின்று கொண்டிருந்த எதிர் அணி வீரர்களான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களும் கண்கலங்கினார். தற்போது இது குறித்து பேசியுள்ளார் அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிக் எட்வர்ஸ். அவர் கூறுகையில் சச்சின் டெண்டுல்கரின் கடைசி போட்டியின் போது நானும் அந்த மைதானத்தில் இருந்தேன். அது ஒரு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாகும்.

Edwards 1

சச்சின் பேசிக்கொண்டிருக்கும்போது நான் கண்ணாடி அணிந்து கொண்டேன். எனது பக்கத்தில் கிறிஸ் கெயில் இருந்தார். எங்களால் எங்களது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. முடிந்தவரை அடக்கிக் கொண்டோம். அந்த தருணம் மிகவும் உணர்ச்சிகரமானது. இந்த மனிதனை இனிமேலும் கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க முடியாது என்ற வருத்தம் எங்கள் தொற்றிக்கொண்டது.

- Advertisement -

ஒருமுறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நான் தடுமாறினேன். அப்போது குறுஞ்செய்தி அனுப்பி இதுபோன்ற கடுமையான சோதனைகள் வருவது மிகவும் சகஜம். தளர்ந்து விடாமல், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தியவர் அந்த மனிதன் என்று கூறியுள்ளார் எட்வர்ட்ஸ்.

Edwards 2

சச்சின் இதுவரை 200 போட்டிகளில் விளையாடி 15921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18426 ரன்களும், 1 டி20 போட்டியில் விளையாடி 10 ரன்களும் குவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement