43 ரன்ஸ்.. ஷாருக்கான அதிரடி.. மதுரையை அடக்கிய நடப்பு சாம்பியன் கோவை.. பிளே ஆஃப்க்கு தகுதி

TNPL 22
- Advertisement -

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 23ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு 22வது போட்டி நடைபெற்றது. திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பேன்தர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய கோவை அணிக்கு துவக்க வீரர்கள் சுரேஷ்குமார் 16, சுஜய் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நிதானமாக விளையாட முயற்சித்த முகிலேஸ் 21 (18) ரன்களிலும் நம்பிக்கை நாயகன் சாய் சுதர்சன் 34 (26) ரன்களிலும் அவுட்டானார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் ஷாருக்கான் அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தார்.

- Advertisement -

மிரட்டும் கோவை:
இருப்பினும் எதிர்புறம் ராம் அரவிந்த் 8, அதீக் உர் ரஹ்மான் 3, முகமத் 0, சித்தார்த் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் இந்தப் பக்கம் மதுரை பவுலர்களை பந்தாடிய சாருக்கான் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 51 (26) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் கோவை 163/9 ரன்கள் எடுத்த நிலையில் மதுரை சார்பில் அதிகபட்சமாக அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 164 ரன்களை துரத்திய மதுரைக்கு கேப்டன் ஹரி நிசாந்தை ஆரம்பத்திலேயே தரமணி கண்ணன் டக் அவுட்டாக்கினார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு துவக்க வீரர் லோகேஸ்வரை 6 ரன்னில் காலி செய்த சித்தார்த் அதற்கடுத்ததாக வந்த சதுர்வேதையும் 10 ரன்னில் காலி செய்தார். அதனால் 25/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு நிதானமாக விளையாட முயற்சித்த ஸ்ரீ அபிஷேக் 1 ரன்னில் கண்ணன் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

போதாக்குறைக்கு அடுத்து வந்த சசிதேவ் 2, முருகன் அஸ்வின் 7 ரன்களில் அவுட்டானதால் 57/6 என ஆரம்பத்திலேயே மதுரை சரிந்தது. அப்போது முடிந்தளவுக்கு போராடிய ஜெகதீசன் கௌஷிக் 27 ரன்களும் மிதுன் 26 ரன்களும் கார்த்திக் மணிகண்டன் 33 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில் 20 ஓவரில் மதுரையை 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய கோவை 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: சாதுவான டிராவிட் அப்படி சொல்வாருன்னு எதிர்பாக்கல.. வங்கதேசத்தை தெறிக்க விட்ட 2018 பின்னணி பற்றி அபிஷேக்

அந்த அணிக்கு அதிகபட்சமாக தரமணி கண்ணன் 4, மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையும் சேர்த்து 6 போட்டியில் 5 வெற்றிகளை பெற்ற நடப்பு சாம்பியன் கோவை 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் 5 போட்டியில் மூன்றாவது தோல்வியைப் பெற்ற மதுரை 7வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement