KKR vs CSK : கொல்கத்தா அணியின் தொடர்ச்சியான வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் – விவரம் இதோ

நேற்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. இந்த வருட தொடரின் துவக்கத்தில் 5 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று அனைத்து அணி

Dinesh
- Advertisement -

நேற்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. இந்த வருட தொடரின் துவக்கத்தில் 5 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று அனைத்து அணிகளுக்கும் அச்சறுத்தலை தந்த கொல்கத்தா அணி தற்போது தொடர்ச்சியாக 3 தோல்விகளை அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kkr

- Advertisement -

ஆரம்ப சமயத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த கொல்கத்தா அணியின் இந்த சரிவிற்கான காரணத்தை பற்றிய அலசல் தான் இந்த பதிவு. இதில் கொல்கத்தா அணியின் தற்போதைய குறைகளை பட்டியலிட்டுளோம் இதோ விவரங்கள் :

சென்னை, டெல்லி தற்போது மீண்டும் சென்னை என அடுத்தடுத்த 3 தோல்விகளுக்கு முதற் காரணம் பேட்டிங் குறைபாடு தான். அதாவது க்றிஸ் லின், நரேன் மற்றும் ரசல் ஆகியோரையே அந்த அணி பேட்டிங்கில் பெருமளவு நம்பி வருகிறது. கார்த்திக், உத்தப்பா மற்றும் கில், ராணா போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்தும் அவர்கள் தொடர்ந்து சோபிக்க தவறி வருகின்றனர். இது தோல்விக்கு முதற்காரணமாக கருதப்படுகிறது.

kkr

அடுத்து குல்தீப் யாதவ் : சென்ற வருட ஐ.பி.எல் போட்டிகளில் கலக்கிய குல்தீப் யாதவ் இந்திய அணிக்காகவும் சமீபமாக சிறப்பாக பந்துவீசி வந்தார். ஆனால், இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே அவர் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறி வருவதோடு, ரன்களையும் அதிகளவு விட்டுக்கொடுக்கிறார். அவருக்கு பதிலாக மற்ற வீரர்களை பயன்படுத்தி பார்க்கலாம்.

- Advertisement -

kuldeep

அடுத்து பவர்பிளேயில் கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவறி வருகின்றனர். வேகப்பந்து வீச்சில் பலம் இல்லாததால் அவர்களுக்கு நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் அவசியம் தேவை. மேலும், க்றிஸ் லின் மற்றும் நரேன் துவக்கமும், ரசலின் கடைசி நேர அதிரடியான இன்னிங்க்ஸை தவிர்த்து பார்த்தல் கொல்கத்தா ரன்களை குவிக்க தடுமாறிவருவது குறிப்பிடத்தக்கது.

Lynn

கொல்கத்தா அணி அடுத்ததாக வரும் வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. அந்த போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement