அனுஷ்கா சர்மா பேரை ஏன் இழுக்குறீங்க? – இந்திய வீரரை வெளுத்து வாங்கிய விராட் கோலி

anushka

கிரிக்கெட் வட்டாரத்தில் அனுஷ்கா சர்மாவின் பெயர் தற்போது அடிக்கடி அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் முன்னாள் விக்கெட் கீப்பர் பரோக் இன்ஜினியர், எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வாளர்களை விமர்சிக்கும் நோக்கில், அனுஷ்கா ஷர்மாவின் பெயர் இழுத்துள்ளார். எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வாளர்கள், இந்திய அணி வீரர்களை தேர்ந்துடுப்பதில் கவனம் செலுத்தாமல் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுக்கு டீ கொடுத்து உபசரிப்பு வேலை செய்வதில் கவனம் செலுத்துகின்றனர் என்று அவர் கடுமையாக சாடி உள்ளார்.

Prasad

இந்திய தேர்வுக்குழு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அவர், இந்திய தேர்வாளர்களை மிக்கி மவுஸ் செலக்ஷன் குழு என்றும் அவர் நேரடியாக விமர்சித்துள்ளார். கடந்த 1961 முதல் 1976 வரை இந்திய அணிக்காக விளையாடிய கீப்பர் பரோக் இன்ஜினீயர் இப்படி நேரடியாக விமர்சித்திருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை போட்டி நடந்த சமயத்தில், அனுஸ்கா ஷர்மா அந்த போட்டிகளை காண சென்றபோது, இந்திய தேர்வு குழுவை சேர்ந்தவர்கள் அனுஸ்கா ஷர்மாவுக்கு டீ கொடுத்து உபசரித்தார்கள் என்று அவர் பதிவு செய்துள்ளார். அவர் இதை சொல்லி பல நாட்கள் ஆன நிலையில் தற்போது வீராட் கோலி அந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Kohli

தேர்வுக்குழுவை விமர்சிக்க வேண்டும் என்றால், கீப்பர் பரோக் இன்ஜினியர் நேரடியாக விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து அனுஸ்கா சர்மாவை இதில் இழுப்பது ஏன்? பிரபல நடிகையான அனுஸ்கா சர்மாவின் பெயரை இதில் இழுத்தாள் தான் இது போன்ற விஷயங்கள் காட்டுத்தீபோல பரவும் என்று எண்ணி தேவை இல்லாமல் அனுஷ்கா சர்மாவின் பெயரை அவர் இதில் இழுத்துள்ளார்.

- Advertisement -

Kohli-1

உலகக்கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான போட்டியை காண அனுஷ்கா ஷர்மா தன் நண்பர்களோடு வந்திருந்தார். அவர் அச்சமயம் பேமிலி பாக்ஸில் அமர்ந்து தான் அந்த போட்டியை கண்டாரே தவிர தேர்வாளர்களோடு சேர்ந்து அல்ல. தேர்வாளர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடம் தனியாக இருந்தது. அப்படி இருக்கையில் பரோக் இன்ஜினியர் இது போன்ற தவறான வீண் வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கோலி கூறியுள்ளார். அதே போல அனுஷா ஷர்மாவும் இது தவறான விமர்சனம் என்று கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.