ரிஷப் பண்ட் கெஞ்சிக்கேட்டும் கண்கொள்ளாத கோலி. இறுதியில் ஏற்பட்ட சோகம் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 364 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 127 ரன்களும், கேப்டன் கோலி 42 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் குவித்துள்ளது.

red cap 2

- Advertisement -

அந்த அணியில் அதிகபட்சமாக துவக்கவீரர் பர்ன்ஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரூட் ஆட்டமிழக்காம 44 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார். அதே போன்று அனுபவ வீரர் ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

இந்த இரண்டாவது நாள் ஆட்ட நேரத்தில் இரண்டாவது செசன் போது இங்கிலாந்து அணி 23 ரன்கள் சேர்த்து இருந்தது. அந்த வேளையில் தனது முதல் ஓவரை வீச வந்த முகமது சிராஜ் அந்த ஓவரிலேயே அடுத்தடுத்து சிப்லி மற்றும் ஹமீது ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

siraj

அதன் பின்னர் பர்ன்ஸ் மற்றும் ரூட் ஆகியோர் இந்திய அணி பவுலர்களை எதிர்த்து சிறப்பாக விளையாடி வந்த வேளையில் மீண்டும் சிராஜ் வீசிய ஒரு ஓவரில் ரூட் தனது பேடில் பந்தினை வாங்கினார். உடனே சிராஜ் அம்பயரிடம் அவுட் கேட்டும் அம்பயர் அவுட் கொடுக்க முன்வரவில்லை. இதன் காரணமாக விராட் கோலியை ரிவ்யூ எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த பஞ்சினை சரியாக கவனித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரிவ்யூ எடுக்க வேண்டாம் என கோலியிடம் சென்று கெஞ்சினார்.

kohli review

இருப்பினும் அவர் சொல்வதை கேட்காமல் சிரித்துக்கொண்டே கோலி ரிவ்யூ எடுத்தார் இறுதியில் ரிரீபிளேவில் அது விக்கெட் இல்லை என்று தெரிந்தது. இதனால் இந்தியா விரைவாகவே 2 ரிவ்யூகளை இழந்தது. எப்போதுமே ரிவ்யூக்கும் கோலிக்கும் ராசி இல்லை என்று இருக்கும் பட்சத்தில் கோலி அவசரப்பட்டு விக்கெட் கீப்பர் பேச்சை கேட்காமல் ரிவியூவ்க்கு சென்றது இறுதியில் சோகமாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement