பகலிரவு போட்டியிலும் சிக்ஸர்களாக தான் அடிப்பேன். அப்போதான் கோலிக்கு பிடிக்கும் – இந்திய வீரரின் பிடிவாதம்

Umesh
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டி ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக மாறி இருக்கிறது. ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டி மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தில் இடையே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா ஏற்கனவே வந்து அடைந்த நிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய போவது யார் ? முதலில் பந்து வீச போவது யார் ? முதல் சதம் யார் அடிப்பார் ? முதல் விக்கெட் யார் வீழ்த்துவார் ? என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஏனெனில் இந்த போட்டியில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் சாதனையாக மாற இருக்கிறது. எனவே இந்த போட்டியில் காண எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த போட்டியிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனக்கு பேட்டிங் கிடைத்தால் சிக்ஸர்களாக அடிக்கவே இருக்கிறார் என்று தெரிகிறது.

ஏனெனில் தென்ஆப்பிரிக்க தொடரின்போது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய உமேஷ் யாதவ் அதிரடியாக சிக்சர்களை அடித்து விளாசினார். அதனைப் போன்றே தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் அஸ்வினுக்கு முன்னதாக பேட்டிங் செய்ய களமிறங்கியத உமேஷ் இறங்கியதில் இருந்து சிக்சர்களை மட்டுமே அடிக்கும் எண்ணத்தோடு விளையாடினார். அந்த போட்டியிழும் பிரமிக்கவைக்கும் அளவிற்கு சில சிக்ஸர்களை அடித்தார். கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சந்தித்த 17 பந்துகளில் 55 ரன்கள் குவித்துள்ளார்.

Umesh-2

மேலும் அதில் 8 சிக்சர்களை அவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் யாதெனில் உமேஷ் யாதவ் எப்போது களம் இறங்கினாலும் சிக்ஸர் அடிப்பது மட்டுமே உங்களுடைய வேலை நீங்கள் நின்று பொறுமையாகவே எல்லாம் ஆட வேண்டாம் என்று கேப்டன் கோலி கூறுவதால் உமேஷ் யாதவ் இறங்கியதும் அதிரடி காட்டுகிறார். எனவே இந்த போட்டியில் ஒருவேளை அவருக்கு பேட்டிங் கிடைக்கும் பட்சத்தில் இந்த போட்டியிலும் சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டு வாணவேடிக்கை காண்பிப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது .

Advertisement