நாளைக்கு ஒருநாள் மட்டும் மோடி சொல்றத கேளுங்கள். கேர்லெஸ்ஸா இருக்காதீங்க – கோலி அறிவுரை

Modi
- Advertisement -

சீனாவில் தொடங்கிய வைரஸ் இந்தியாவில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது சில நாட்களுக்கு முன்னர் 40 என்று இருந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது 250 தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

corona 1

- Advertisement -

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி சுய ஒழுக்கத்துடன் இருந்தால் மட்டுமே இந்த வைரஸ் மீதான போராட்டத்தை சரியாக கொண்டு செல்ல முடியுமென அரசாங்கங்கள் அறிவித்து வருகிறது. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவுரையை மக்கள் அனைவரும் அவமதிக்காமல் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் இந்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் தன ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் பேசுகையில் :

- Advertisement -

கொரோனா வைரசை எதிர்கொள்ள நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும். மிகவும் எச்சரிக்கையுடனும் சுய ஒழுக்கத்துடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்கள் ஆக இருந்து இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து இந்திய பிரதமர் அறிவுறுத்தியுள்ள அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

corona

கோலியின் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த விடீயோவிற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிடுவது மட்டுமின்றி இந்த வீடியோவினை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement