என்ன நடந்தாலும் இதை மட்டும் பண்ணவே மாட்டேன். சத்தியம் – ரசிகர்களுக்கு உறுதியளித்த விராட் கோலி

Kohli
- Advertisement -

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர். ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பித்தபோது விராட் கோலி இரண்டாம் பாதியில் நான் இந்த ஐபிஎல் தொடரோடு பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு எப்படியாவது பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றி விடவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.

kohli 2

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் மீண்டும் ஒருமுறை பெங்களூரு அணியின் கோப்பை கனவு பறிபோனது. இம்முறையும் பெங்களூரு அணி வெளியேறியதன் காரணமாக கோலியின் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும் போட்டி முடிந்த பின்னர் மைதானத்திலேயே இந்த தோல்வியை நினைத்து கண்கலங்கியது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது கேப்டன்சி குறித்து பேசிய விராட் கோலி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இனிவரும் காலங்களில் ஆர்.சி.பி அணிக்காக இளம் வீரர்கள் முன்வந்து விளையாடி தலைமை தாங்க வேண்டும். அந்த கலாச்சாரத்தை அளித்து விட்டு செல்கிறேன். நான் ஆர்சிபி அணிக்காக என்னுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கியுள்ளேன்.

Kohli-2

ஒவ்வொரு ஆண்டும் நான் 120% சதவீதம் என்னுடைய அர்ப்பணிப்பை பெங்களூர் அணிக்காக வழங்கியுள்ளேன். இம்முறை நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கூறியது உறுதியான ஒரு முடிவுதான். இருப்பினும் என்னை நீங்கள் ஒரு வீரராக ஆர்சிபி அணியில் தொடர்ந்து பார்க்கலாம். அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம். அடுத்த மூன்றாண்டுகள் அதே அணிதான் இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : பெங்களூரு அணியை எளிதில் வீழ்த்தியதற்கு இவரே காரணம். இவர் ஒரு லெஜன்ட் – மோர்கன் மகிழ்ச்சி

நிச்சயம் நான் வேறொரு அணியில் விளையாட விரும்பவில்லை. நான் ஐ.பி.எல் தொடரில் எந்த ஒரு அணியிலும் சென்று விளையாடமாட்டேன். என்னுடைய வார்த்தைகள் முற்றிலும் உண்மையானவை நான் என்னுடைய கடைசி நாள் வரைக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என ரசிகர்களுக்கு கோலி உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement