பெங்களூரு அணியை எளிதில் வீழ்த்தியதற்கு இவரே காரணம். இவர் ஒரு லெஜன்ட் – மோர்கன் மகிழ்ச்சி

Morgan-1
- Advertisement -

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மோதும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

rcbvskkr

- Advertisement -

அதன்படி முதலில் அதிரடி காண்பித்த பெங்களூர் அணி 5 ஓவர்களில் 49 ரன்கள் என்ற சிறப்பான துவக்கத்தை பெற்றது. பின்னர் ஆறாவது ஓவரின் முதல் பந்தில் படிக்கல் ஆட்டமிழந்தும் வெளியேற தொடர்ச்சியாக பெங்களூர் அணி சரிவை கண்டது. அதன்பின்னர் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் பெங்களூர் அணி ரன் குவிக்க முடியாமல் கடைசியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே குவித்தது.

கொல்கத்தா அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்கிலும் சுனில் நரேன் 15 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அசத்தினார்.

narine 1

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியை சுனில் நரேன் மிகவும் எளிமையாக்கி விட்டார். சரியான இடைவெளிகளில் விக்கெட்டை வீழ்த்தி அசத்திவிட்டார். அதுமட்டுமின்றி சேசிங்கிலும் அவர் கடினமான இந்த மைதானத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க செய்ஞ்ச இந்த 2 தவறு தான் இந்த போட்டியில் நாங்க தோக்க காரணம் – விராட் கோலி வருத்தம்

இந்த மைதானம் சற்று இருதன்மை உடையதாக இருந்தாலும் இலக்கு சிறியதே என்பதனால் பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு விட்டோம். இந்த போட்டியில் சுனில் நரைன் எங்களுக்கு தனியாளாக வெற்றியையும் பெற்று கொடுத்துவிட்டார். நிச்சயம் அவர் ஒரு உண்மையான t20 லெஜன்ட். அவர் எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி என மோர்கன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement