ரவி சாஸ்திரி தான் வேண்டும் விடாப்பிடியாக இருக்கும் கோலி. மற்றவர்களுக்கு ஆப்பு – பி.சி.சி.ஐ புது பிளான்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியில் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நீடிக்க கோலி அதிகஅளவு சப்போர்ட் செய்து வருவதாக தெரிகிறது. ஏனெனில் கோலிக்கும் ரவிசாஸ்திரிக்கும் இடையேயான நெருக்கம் இந்திய கிரிக்கெட் அணி அறிந்ததே. இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றாலும் முக்கிய கட்டங்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. எனவே பயிற்சியாளரும், கேப்டனையும் மாற்ற வேண்டிய திட்டம் பிசிசிஐ-யிடம் இருந்தாலும் தற்போது கோலியை மாற்ற பிசிசிஐக்கு எண்ணம் இல்லை.

Ravi

ஆனால் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய எண்ணம் இருந்தாலும் கோலியின் ஆதரவு அவருக்கு அதிக அளவு இருப்பதால் அடுத்த பயிற்சியாளர் அவரே தொடர வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதிலாக பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் என அனைவரையும் மாற்றி இந்திய அணி மேலும் வலுப்படுத்த பிசிசிஐ புதிய திட்டம் ஒன்றை வைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement