எனக்கு பேட்டிங் வேண்டாம் நானும் போறேன் ஜடேஜாவுடன் மைதானத்திலுருந்து வெளியேறிய கோலி – காரணம் இதுதான்

Jadeja-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

Jadeja

- Advertisement -

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. கோலி ஆட்டமிழக்காமல் 254 குவித்தார். ஜடேஜா 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை குவித்துள்ளது.

இந்த போட்டியில் அதிரடியாக ரன் குவித்து வந்த கோலி இரட்டை சதத்தை கடந்தார். மேலும் தேநீர் இடைவேளைக்குப் பின்னரும் இந்திய அணியின் பேட்டிங் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஜடேஜா மற்றும் கோலி ஆகியோர் விரைவாக ரன்களை சேர்த்துக் கொண்டே இருந்தனர். அப்போது ஜடேஜா 100 ரன்கள் அடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து கோலி. ஒருகட்டத்தில் 92 ரன்களில் ஜடேஜா அவுட் ஆகும்போது உடனே கோலி டிக்ளேர் முடிவை அறிவித்தார்.

Umesh

அப்பொழுது கோலி 254 ரன்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நினைத்திருந்தால் 300 ரன்கள் அடிக்கும் வரை பேட்டிங்கை செய்திருக்கலாம் ஆனால் ஜடேஜா அவுட் ஆகும்போது இந்திய அணிக்கு மீதம் ஒரு 10 முதல் 15 ஓவர்கள் வரை வீசிய வாய்ப்பு இருந்ததால் அவர் அதற்குள் தென்ஆப்பிரிக்க அணியின் சில விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் தன் தனிப்பட்ட சாதனையை கருத்தில் வைக்காமல் டிக்ளேர் முடிவை அறிவித்தார். அதன்படியே இன்று இந்திய அணி ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை 15 ஓவர்களில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement