ரிக்கி பாண்டிங்கின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கிங் கோலி – விவரம் இதோ

Ponting
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக ஜோ ரூட்டும் தலைமைதாங்கி விளையாட போகின்றனர். சமகாலத்தில் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவன் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோர் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பாதிக்கப்படுகின்றனர்.

- Advertisement -

இதில் ஒவ்வொருவரும் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவ்வப்போது முறியடித்து வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி தான் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்து துவம்சம் செய்து இருக்கிறார். இந்நிலையில் இந்த முறை விராட் கோலி ஆஸ்திரேலிய முன்னாள் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிக்க போகிறார்.

இதுவரை கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி மொத்தம் 196 போட்டிகளில் பேட்டிங் பிடித்து 41 சதங்கள் விளாசி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 21 சதமும் டெஸ்ட் போட்டிகளில் 20 சதமும் அடித்திருக்கிறார். ஒரு கேப்டனாக அதிக சதங்கள் அடித்து இருக்கிறார் என்றால் அது ரிக்கி பாண்டிங் தான். அவர் மொத்தம் 41 சதங்கள் அடித்து இருக்கிறார்.

Ponting

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ஒரு சதம் அடித்தாலும் விராட் கோலி அந்த சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம் பெறுவார். இதனால் இந்த சாதனையை விராட் கோலி எப்போது முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இதனை அடுத்து மூன்றாவது இடத்தில் 33 சதங்களுடன் கிரீம் ஸ்மித் (33 சதம்) நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் (20) 4வது இடத்தில் உள்ளனர்.

kohli

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் (19) ஐந்தாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிரையன் லாரா (19) ஆகியோர் இருக்கின்றனர். கூடுதல் தகவலாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி 5 சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement