6.3 ஓவர்களில் ஸ்காட்லாந்தை அணியை அடித்து நொறுக்க இதுவே காரணம் – வெற்றி குறித்து கோலி மகிழ்ச்சி

kohli

இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

indvssco

அதன்பின்னர் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு 7.1 ஓவரில் அடித்தால் ரன் ரேட்டில் ஆப்கானிஸ்தான் அணியை முந்த முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் துவக்கத்திலிருந்தே இந்திய அணி சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தியது. முதல் 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 30 ரன்களும், ராகுல் 50 ரன்கள் குவித்து அசத்தினார்கள். பின்னர் மீதமுள்ள 7 பந்துகளில் 4 ரன்கள் அடித்தால் போதும் என்ற நிலைமை இருந்தது.

- Advertisement -

இறுதியில் ஆறாவது ஓவரின் 3-வது பந்தில் சிக்சர் அடித்து சூர்யகுமார் யாதவ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி விளையாடி உள்ளோம். ஆனால் இந்த போட்டி குறித்து அதிகம் பேச விரும்பவில்லை 7-ஆம் தேதி என்ன நடக்கிறது ? என்பதை காண ஆவலாக உள்ளோம். இதுபோன்ற போட்டியில் டாஸ் வெற்றி பெறுவது என்பது முக்கியம்.

rohith

அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்று அவர்களை 110-120 ரன்களுக்கு சுருட்ட நினைத்தோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது காரணமாக அதையும் விட குறைவாக ரன்களில் சுருட்ட முடிந்தது. பேட்டிங்கில் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்பாக துவக்கம் கொடுத்தனர். நாங்கள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 8 முதல் 10 ஓவர்களிலேயே இந்த வெற்றி இலக்கை அடைய அடைய நினைத்தோம். ஆனால் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோரது துவக்கம் எங்களை விரைவிலேயே அணியின் வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

- Advertisement -

இதையும் படிங்க : 14 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலககோப்பையில் கே.எல் ராகுல் படைத்த சாதனை – விவரம் இதோ

துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ஒரு விக்கெட்டை இழந்ததால் மேலும் 20 பந்துகளை கூடுதலாக சந்திக்க நேரிடும். ஆனால் எங்களது ஓப்பனர்கள் இந்த போட்டியில் பயிற்சி போட்டிகளில் எவ்வாறு விளையாடினார்களோ அதேபோன்று அதிரடியாக விளையாட நாங்கள் ரன் ரேட்டை மனதில் வைத்தே 6.3 ஓவர்களிலேயே முன்கூட்டியே போட்டியை முடித்து வெற்றி பெற்றுள்ளோம். பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் ஷமி பேட்டிங்கில் ரோஹித் மற்றும் ராகுல் சிறப்பாக விளையாடினர் என கோலி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement