இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியானது இன்று பெல்பாஸ்ட் நகரில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும், இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும் முயற்சியிலும் அயர்லாந்து அணியும் களமிறங்க இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய அணிக்காக அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி :
புதிய கேப்டன் தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்து அணியை வீழ்த்த கடுமையான பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியின் போது இந்திய அணி தோல்வியை தழுவியதால் சில விமர்சனங்கள் ஏற்பட்ட வேளையில் இன்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூரியன்வன்ஷி துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
அப்படி வைபவ் சூர்யவன்ஷி துவக்க வீரராக களமிறங்கினால் சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார். மேலும் இஷான் கிஷன் நான்காவது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது இடத்திலும், ஆறாவது இடத்தில் திலக் வர்மாவும் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இதையும் படிங்க : விராட் கோலி, ரிஷப் பண்ட், சுப்மன் கில் வரிசையில் மோசமான சாதனையை சமன் செய்த – ஷ்ரேயாஸ் ஐயர்
அதேபோன்று பந்துவீச்சில் ஷிவம் துபே முழு நான்கு ஓவர்களையும் வீச வேண்டிய சூழலும் ஏற்படும். இதை இந்திய அணி எவ்வாறு கையாளப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த போட்டியின் போது மோசமான செயல்பாட்டை வெளிடுத்திய வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



