14 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலககோப்பையில் கே.எல் ராகுல் படைத்த சாதனை – விவரம் இதோ

Rahul-1

இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி தாங்கள் முதலில் பந்து வீசுவதாக முடிவுசெய்தார்.

indvssco

அதன்படி இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக ஷமி மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதேவேளையில் இந்த வெற்றி இலக்கினை 7.1 ஓவர்களில் அடித்தால் புள்ளிப் பட்டியலில் நாம் ஆப்கானிஸ்தானை தாண்டி நல்ல ரன் ரேட் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. இதனை சரியாக பயன்படுத்திய இந்திய துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் துவக்கத்திலேயே அதிரடி காண்பித்தனர். முதல் 5 ஓவர்களில் 70 ரன்கள் குவித்த நிலையில் 30 ரன்கள் எடுத்திருந்த ரோகித் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் சரியாக பவர்பிளே முடியும் கடைசி பந்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் ஆட்டமிழக்க இந்திய அணி தனது முதல் 6 ஓவர்களில் 82 ரன்கள் குவித்தது.

rahul

பின்னர் சூரியகுமார் களத்திற்கு வந்து சிக்ஸ் அடிக்க இறுதியில் இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே 89 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் டி20 உலக கோப்பையில் முக்கியமான சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பர்த் டே அன்னைக்கு இது நடந்தது ரொம்ப ஹேப்பி. டாஸிற்கு சுவாரசிய தகவலை சொன்ன – விராட் கோலி

அந்த சாதனை யாதெனில் இதுவரை உலக கோப்பை டி20 தொடரில் 12 பந்துகளில் யுவ்ராஜ் சிங் அடித்த அரைசதமே அதிவேக அரைசதமாக உள்ளது. இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி சார்பாக இரண்டாவது அதிவேக அரைசதத்தை இந்த போட்டியில் ராகுல் 18 பந்துகளில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement