பர்த் டே அன்னைக்கு இது நடந்தது ரொம்ப ஹேப்பி. டாஸிற்கு சுவாரசிய தகவலை சொன்ன – விராட் கோலி

kohli

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக ரன் ரேட்டில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது.

indvssco

அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் பெரிய ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகி உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் நான்காவது போட்டியில் இந்திய அணி மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற பட்சத்தில் சற்று முன்னர் துவங்கிய இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து தற்போது பந்து வீசி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி டாசுக்கு பிறகு சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் கோலி கூறியதாவது : நாங்கள் இந்த போட்டிகள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். ஏனெனில் டியூ இந்த போட்டியில் பெரிய காரணியாக அமையும் என்பதனால் முதலில் பந்து வீச விரும்புகிறோம்.

ashwin

அது மட்டுமின்றி அவர்களை குறைந்த ரன்களில் சுருட்டி வேகமாக சேசிங் செய்யவும் விரும்புகிறோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : என்னுடைய பிறந்த நாளில் முதல் முறையாக டாஸினை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய பிறந்தநாள் அன்று இன்றுதான் முதல் போட்டியில் நாங்கள் விளையாடுகிறோம் என்று கோலி சிரித்துக் கொண்டே கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : கொஞ்சம் டைம் கொடுங்க. நாங்க பெரிய அணிக்கு எதிராகவும் மேஜிக்கை செய்து காட்டுவோம் – ரஷீத் கான் நம்பிக்கை

மேலும் இந்த போட்டியின் முதல் பந்திலிருந்தே நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றும் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கோலி கூறினார். அணியில் உள்ள மாற்றம் குறித்து பேசிய கோலி ஷர்துல் தாகூர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இணைவதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement