கொஞ்சம் டைம் கொடுங்க. நாங்க பெரிய அணிக்கு எதிராகவும் மேஜிக்கை செய்து காட்டுவோம் – ரஷீத் கான் நம்பிக்கை

Rashid
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரானது தற்போது சூப்பர் 12-சுற்றின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை ? என்பது தெரியவரும். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

rashid

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் 170 முதல் 180 ரன்கள் வரை துரத்தி இருப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்திய அணி கூடுதலாக 30 ரன்களை அடித்து விட்டதால் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது. மேலும் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் எங்களால் அவர்களை தகர்க்க முடியாமல் போனது.

ஒருவேளை விக்கெட்டுகளை நாங்கள் விரைவில் வீழ்த்தியிருந்தால் அந்த போட்டியில் எங்களால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஆப்கானிஸ்தான் அணி தற்போது பெரிய அணிகளையும் வீழ்த்தும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. ஆனால் அதற்கு கொஞ்ச காலம் தேவைப்படலாம்.

Afg

ஏனெனில் இப்போது தான் நாங்கள் ஒரு அணியாக பெரிய அணிகளுடன் சேர்ந்து உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் விளையாடி வருகிறோம். இன்னும் அதிகமாக மற்ற அணிகளுடன் தொடர்ந்து விளையாடினால் தான் அவர்களது பலவீனத்தை அறிந்து அதற்கேற்றவாறு எங்களால் செயல்பட முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நான் கண்டிப்பாக விளையாடுவேன். எந்த அணிக்கு தெரியுமா ? – வார்னர் கருத்து

விரைவில் எங்கள் அணி வீரர்கள் பெரிய பெரிய அணிகளை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கைக்கு எங்களிடம் உள்ளது என ரஷித் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement