Virat Kohli : இவர் தொடங்க, இவர் இடையில் நிற்க, இவர் இறுதியில் போட்டியை முடித்து வைத்தார் – கோலி பேட்டி

உலக கோப்பை தொடரின் எட்டாவது போட்டி நேற்று சவுத்தாம்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டூப்ளிஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடரின் எட்டாவது போட்டி நேற்று சவுத்தாம்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டூப்ளிஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையே நடைபெற்றது.

ind vs sa

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் கேப்டன் டூபிளிஸ்சிஸ் 38 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் சார்பாக சாஹல் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 122 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

rohith

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் முதல் போட்டியை விளையாடுகிறோம். இது சவாலான ஒன்று ஆகும். ஆனால் நாங்கள் இந்த போட்டியில் சரியாக விளையாடி வெற்றி பெற்று விட்டோம். இந்த மைதானத்தில் டேட்டிங் செய்வது சற்று சவாலாக இருந்தது. ஆனாலும் ரோகித் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று பவுலிங்கில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார் அவர் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தார். மேலும் சாஹல் சிறப்பாக பந்துவீசினார். அவரது பந்து வீச்சு இந்த போட்டியில் அபாரமாக இருந்தது.

pandya

இந்த முதல் வெற்றி எப்போதும் முக்கியமானது ஏனெனில் தொடரின் முதல் வெற்றி எப்போதும் வீரர்களுக்கு தன்னம்பிக்கை தரும். இந்த போட்டியில் பேட்டிங்கில் ரோஹித் சிறப்பாக துவங்கி வைக்க மிடில் ஆர்டரில் ராகுல் மற்றும் தோனி சிறப்பாக ஆட பாண்டியா இறுதியில் சிறப்பாக முடித்து வைத்தார். மொத்தத்தில் இது ஒரு அணிக்கு கிடைத்த வெற்றி அனைவரின் பங்களிப்பும் இதில் இருந்தது மகிழ்ச்சி என்று கோலி கூறினார்.

Advertisement