அவரும் இல்லை. நானும் ரன் குவிக்கவில்லை அதுவே தோல்விக்கு காரணம் – கோலி வருத்தம்

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த தோல்வி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Ind-lose

- Advertisement -

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : முதல் போட்டியில் போது சரியான நோக்கத்துடன் நாங்கள் ஆடவில்லை. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் நன்றாக ஆடினோம். ஆனால் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பட்டையை கிளப்பி விட்டனர். ஆட்டம் முழுவதும் எங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து கொண்டே இருந்தனர். எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன்காரணமாக வித்தியாசமான ஷாட்களை ஆட வேண்டி இருந்தது. சரியான திட்டமிடுதலும் செயல்படுதலும் எங்களிடம் இல்லை. நியூசி. பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து எங்களுக்கு அழுத்தம் கொண்டே இருந்தனர் . எங்களை தவறு செய்ய வைத்தார்கள். ஒரு காலத்தில் நாங்கள் பேட்டிங்கில் மட்டுமே தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த அணியாக இருந்தோம். ஆனால், தற்போது பந்துவீச்சாளர்களுக்கு தேவையான பேட்டிங்கை நமது வீரர்கள் சரியாக செய்யவில்லை.

rahane

பந்துவீச்சாளர்களுக்கு துணை நிற்கும் பேட்டிங் யூனிட் நம்மிடம் இல்லாத போது நமக்கு வருத்தமாக இருக்கும். வெளிநாட்டில் வெற்றி பெற வேண்டுமென்றால் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சரியாக இருக்கவேண்டும். இந்த தவறுகள் எல்லாம் சரி செய்துகொண்டு அடுத்த போட்டிக்கு தயாராவதே எங்களது இலக்கு. ஒரு சர்வதேச அணியாக நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நன்றாக ஆடவேண்டும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரோஹித் இந்த தொடரில் விளையாடவில்லை. நானும் இந்த தொடரில் ரன் குவிக்கவில்லை அதனால் தான் இந்த தொடரில் எங்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இது எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது.

Advertisement