இவர் மட்டும் மீது பழி போட வேண்டாம். இவர் என்ன செய்தார் தோல்விக்கு அனைவருமே பொறுப்பு – கோலி ஆவேசம்

- Advertisement -

நியுஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தற்கு காரணம் பேட்ஸ்மேன்கள் தான் என விராட் கோலி ஒப்புக்கொண்டதை பார்த்தோம். அது உண்மை தான். இந்த போட்டியில் விளையாடிய மயங்க் அகர்வால் 4 ஆட்டத்திலும் சேர்த்து 102 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர் .

Pant

- Advertisement -

விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா விற்கு பதில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 4 ஆட்டத்திலும் சேர்த்து 19, 25, 12 மற்றும் 4 என மொத்தம் 60 ரன்கள் சேர்த்துள்ளார். அவருக்கு போதுமான வாய்ப்பு கொடுத்தும் சொதப்பியதால் இந்திய வீரர்கள் தோல்விக்கு அவர்தான் காரணம் எனவும் பேசி வருகின்றனர்.

இது குறித்து விராட் கோலி பேசுகையில் : ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பந்திற்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தோம். ஆனால், சிறப்பாக விளையாட வில்லை. என்றாலும் மீண்டும் அணிக்குள் வந்தார். ஒரு வீரருக்கு சரியான வாய்ப்பை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை.

pant

அவரை மட்டுமே தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுவது தவறு என்றும் இந்த தொடரின் தோல்விக்கு அனைவருமே காரணம் என்றும் விராட் கோலி பேசியுள்ளார். டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி எளிதில் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த தொடர் தோல்வி ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

Advertisement