சதம் அடிக்கும் முன்னர் படிக்கல் என்னிடம் கூறியவை இதுதான் – கோலி பகிர்ந்த சுவாரசியம்

Padikkal

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தட்டுத்தடுமாறி 177 ரன்களை குவிக்க பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் அணியை கலங்கடித்தனர். பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களை ராஜஸ்தான் அணியின் பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

padikkal

178 ரன்களை துரத்திய பெங்களூரு அணியின் துவக்க வீரர்களான படிக்கல் மற்றும் கோலி ஆகியோர் ஆட்டமிழக்காமல் 181 ரன்களை வெறும் 16.3 ஓவர்களில் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பெற்று தந்தனர். ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தபோது டாப் ஆர்டர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் பேட்டிங் செய்ய கஷ்டப்பட்டு இறுதியில் ஓரளவுக்கு ரன்களை குவித்தது.

- Advertisement -

ஆனால் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் இருவரும் எந்தவித சலனமும் இன்றி எளிதாக ரன்களைக் குவித்தனர். குறிப்பாக அந்த அணியின் இளம் வீரரான படிக்கல் துவக்கத்திலிருந்தே பவுண்டரியும் சிக்சருமாக அடித்து சிறப்பாக விளையாடி வந்தார். இறுதியில் 52 பந்துகளை சந்தித்த அவர் 101 ரன்களை குவித்து தனது ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தது மட்டுமின்றி அதிவேக சதம் அடித்த அன்கேப்டு வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த இன்னிங்சில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் அடித்து அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

Padikkal

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து கோலி பேசுகையில் படிக்கல் சதம் அடிக்கும் முன்னர் நடந்த சுவாரசிய சம்பவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : சதத்திற்கு முன்னர் படிக்கல் என்னிடம் வந்து “நீங்கள் போட்டியை முடித்துவிடுங்கள்” என்று கூறினார். ஆனால் நான் அவரிடம் முதலில் நீ செஞ்சுரி அடி என்று கூறினேன். அதற்கு பதிலளித்த படிக்கல் என்னிடம் இருந்து இன்னும் நிறைய செஞ்சுரி வரும். அதனால் நீங்கள் விரைவாக போட்டியை முடித்து விடுங்கள் என்று கூறினார்.

- Advertisement -

padikkal 1

அதற்கு நான் முதலில் நீ செஞ்சுரி அடித்து உன்னுடைய Landmarkயை எடு. அதன்பின்னர் வந்து என்னிடம் இதை சொல்லு என்று கூறினேன். இந்த போட்டியில் நிச்சயம் அவர் சதம் அடிக்க தகுதியானவர் என கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement