ரொம்ப தெளிவா இருந்தோம். ஆனா இவரோட விக்கெட் விழுந்தது தான் நாங்க தோக்க காரணம் – கோலி வருத்தம்

kohli
- Advertisement -

அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது துவக்கத்தில் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை உடனடியாக இழந்தாலும் அதன் பின்னர் அனுபவ வீரர்களான ஜேசன் ராய் மற்றும் வில்லியம்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 84 ஆக இருந்தபோது வில்லியம்சன் ஆட்டமிழந்தும் வெளியேற அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததனர்.

srhvsrcb

- Advertisement -

இறுதியில் சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 44 ரன்கள் குவித்தார். பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியானது சன்ரைசர்ஸ் அணியின் அபார பந்து வீச்சு காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் மேக்ஸ்வெல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறியது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய திட்டம் அனைத்தும் சரியாகவே இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் இலக்கை முன்கூட்டியே முடிக்க நினைத்தோம்.

Maxwell

இந்த வெற்றியை பெற நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க கூடாது என்பதையும் நினைத்தோம். எனினும் துவக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்ததால் மறுபடியும் பார்ட்னர்ஷிப் அமைக்க நேரம் எடுத்துக்கொண்டது. மேக்ஸ்வெல்லின் ரன்அவுட் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் இன்னும் சில ஓவர்கள் அவர் களத்தில் நின்று இருந்தால் நிச்சயம் போட்டியை முன்கூட்டியே முடித்திருப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஈஸியா ஜயிக்கவேண்டிய மேட்ச் ஒரே பால்ல எல்லாம் மாறிடிச்சி – பெங்களூரு அணி தோக்க இதுதான் காரணம்

அதேபோன்று ஏபி டிவில்லியர்ஸ் களத்தில் இருக்கும்போது நாம் போட்டியிலிருந்து வெளியேறப் போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் இறுதியில் எங்களுக்கு எதிர்பாராத தோல்வி கிடைத்தது. முதலாவது பாதியில் சிறப்பாக பந்துவீசிய நாங்கள் சேசிங் செய்ய தவறி விட்டோம். ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் சரியான விதத்தில் பந்து வீசினார்கள். கடைசி சில ஓவர்களை அவர்கள் மிகவும் அற்புதமாக வீசினார்கள் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement