ஈஸியா ஜயிக்கவேண்டிய மேட்ச் ஒரே பால்ல எல்லாம் மாறிடிச்சி – பெங்களூரு அணி தோக்க இதுதான் காரணம்

Maxwell
- Advertisement -

நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான 52-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ஜேசன் ராய் 44 ரன்களும், அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 31 ரன்களும் குவித்தனர்.

srhvsrcb

அவர்களைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறிய சன் ரைசர்ஸ் அணி இறுதியில் தட்டு தடுமாறி 141 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் டாப் 2 இடங்களுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதால் நிச்சயம் இந்த இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் சன் ரைசர்ஸ் அணியின் அபார பந்து வீச்சு காரணமாக 20 ஓவர்களின் முடிவில் அவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர். இந்த போட்டியில் பெங்களூர் அணி தோற்க மேக்ஸ்வெல்லின் ரன்அவுட் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கோலி 5 ரன்களிலும், கிறிஸ்டியன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறியதை அடுத்து பாரத் 12 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

maxwell 1

இதன் காரணமாக பெங்களூர் அணி 6.5 ஓவர்கள் முடிவில் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன் பின்னர் வந்த மேக்ஸ்வெல் வந்ததிலிருந்தே அதிரடி காட்டினார். குறிப்பாக ரஷீத் கான் ஓவரில் 2 சிக்சர்களை விளாசிய அவர் 25 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். ஒருகட்டத்தில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் முன்கூட்டியே போட்டியை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 15வது ஓவரின் முதல் பந்தில் ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் பும்ராவின் சாதனையை தகர்த்த ஹர்ஷல் பட்டேல் – நேற்றைய போட்டியில் நடந்த சம்பவம்

அந்த விக்கெட் விழுந்ததுதான் போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் வந்த டிவில்லியர்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாலும் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஒரு வேலை மேக்ஸ்வெல்லின் விக்கெட் விழாமல் இருந்திருந்தால் நிச்சயம் பெங்களூர் அணி இந்த போட்டியை இரண்டு ஓவர்களுக்கு முன்னதாகவே வெற்றி பெற்றிருக்கும் என்பது உறுதி.

Advertisement