உண்மைய சொல்லனும்னா நியூசி அணிக்கெதிரான தோல்விக்கு இதுவே காரணம் – ஒப்புக்கொண்ட விராட் கோலி

Williamson
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் மிக முக்கியமான லீக் போட்டியில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய அணியானது நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பிரகாசப் படுத்த முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியானது முதலாவதாக பேட்டிங் செய்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இஷான் கிஷன் 4 ரன்களிலும், ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின்னர் ரோஹித் 14 ரன்கள், கோலி 9 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

sodhi

- Advertisement -

அதன்பின்பு ரிஷப் பண்ட் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஹர்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் முறையே 23,26 ரன்களை குவித்தனர். பின்னர் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணி சார்பாக டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியானது 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததன் காரணமாக தற்போது அரையிறுதிக்கான வாய்ப்பு மங்கியுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு விடயங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

williamson 1

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி தைரியமாக செயல்படவில்லை. எங்களுடைய உடல் மொழியிலும் தைரியம் இல்லை. ஆனால் நியூசிலாந்து அணி ஆட்டத்தை சிறப்பாக கையாண்டனர். எந்த ஒரு நேரத்திலும் நாங்கள் ரன் குவிக்க சான்ஸ் எடுத்தாலும் விக்கெட் விழுந்தது. மேலும் ஒரு கட்டத்தில் ஷாட்டுக்கு போலாமா ? வேண்டாமா ? என்ற பயமும் ஏற்பட்டது என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் மைதானத்துக்கு கூட வரவில்லையாம் – விளையாடாதது ஏன் ?

மேலும் தொடர்ந்து பேசிய கோலி கூறுகையில் : இந்திய அணிக்காக விளையாடும் போது நம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும். மக்கள் அனைவரும் நம்மை கவனித்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இந்த இரண்டு போட்டியிலும் நாங்கள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டோம். இருப்பினும் இந்த தொடரில் இன்னும் சில போட்டிகள் எங்களுக்கு உள்ளன அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement