Virat Kohli : எட்டக்கூடிய இலக்குதான். பேச வேற எதுவும் இல்லை. தோல்விக்கு காரணம் இதுதான் – கோலி

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Ind vs Eng

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bairstow

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கோலி கூறியதாவது : ஒவ்வொரு அணியும் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றுத்தான் ஆகவேண்டும். அவ்வாறு தோல்வி அடையும்போது எதிரணி நன்றாக விளையாடியதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி அவர்களுடைய திட்டத்தை சரியாக பயன்படுத்தினர் இருப்பினும் நாங்களும் நல்ல கிரிக்கெட்டை இங்கே விளையாடினோம்.

Rohith

இந்த போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்கு வகித்தது. ஏனெனில் பவுண்டரி எல்லைகள் மிக சிறியதாக இருந்தது இதனால் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு இது வசதியாக அமைந்தது நாங்கள் இறுதியில் அடித்து ஆடலாம் என்று நினைக்கும் போது மைதானம் மந்தமாகியது. அதனை பயன்படுத்தி அவர்கள் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற்றுவிட்டனர் என்று கோலி கூறினார்.

Advertisement