மழை பெய்தும் அஷ்வின், ஜடேஜா என இருவரையும் விளையாட வைக்க காரணம் இதுதான் – கோலி விளக்கம்

Kohli-4

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டி முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டதால் முதல் நாள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே இரண்டு முப்பது மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார்.

indvsnz

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் இணைந்து விளையாடினர். இருவரும் நன்றாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் பாட்னர்ஷப் அமைத்தனர். ரோகித் சர்மா 34 ரன்கள் எடுத்த நிலையில் கில் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். இதனால் இந்திய அணி தற்போது உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாஸிற்குப் பிறகு இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றப்படலாம் என்ற ஒரு கருத்து பரவலாக இருந்தது. ஏனெனில் நேற்று முழுவதும் மழை பெய்துள்ளதால் இந்த மைதானம் ஸ்பின்னிக்கு ஆதரவு கிடைக்காது என்ற காரணத்தினால் ஜடேஜா வெளியேற்றப்பட்டு விகாரி விளையாட வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் கோலி : ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து விளையாடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதன் காரணம் குறித்து அவர் கூறுகையில் : அஸ்வின் ஜடேஜா ஆகிய இருவரும் எந்த கண்டிஷனும் சிறப்பாக பந்து வீச கூடியவர்கள் அதுமட்டுமின்றி மைதானத்தில் ஈரப்பதம் இருந்தால் கூட அவர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.

- Advertisement -

test poti mazhai

இதன் காரணமாகவே அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி அணியில் இணைத்து உள்ளது குறிப்பிட தக்கது நேற்றைய ஒருநாள் போட்டி முழுவதும் மழையால் நின்ற நிலையில் மீதமுள்ள ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் இந்த போட்டி நிறைவு பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement