இந்தூர் மைதானத்தில் இவர் சிறப்பாக பந்துவீசுவார் – டாஸ் போட்டதும் பவுலரை புகழ்ந்த கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொமினுள் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி பந்துவீசி வருகிறது.

Ind vs Ban

- Advertisement -

இந்நிலையில் டாஸ் முடிந்து பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்த போட்டி குறித்து கூறியதாவது :இந்த மைதானத்தில் சிறிய அளவிலான புற்கள் இருப்பது முதல் நாளில் எங்களது பந்து வீச்சுக்கு மைதானம் ஒத்துழைப்பு தரும் எனவே நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்து வீச விருப்பப்பட்டோம்.

அதேபோன்று இந்த போட்டியில் பேட்டிங் செய்ய சூழ்நிலை கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று உணர்கிறேன். மேலும் நமது அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது சிறப்பாக உள்ளனர் இரண்டாம் நாளிலிருந்து இந்த மைதானம் பேட்டிங் சாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர் உடன் நாங்கள் களமிறங்க உள்ளோம்.

Ishanth

நதீம் இந்த போட்டியில் விளையாடவில்லை அவருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனெனில் இது வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளம் என்பதால் இந்த போட்டியில் இஷாந்த் சர்மா சாதிப்பார் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது. உணவு இடைவேளை வரை பங்களாதேஷ் அணி 26 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Advertisement