ஏ.பி.டி-க்கு மெசேஜ் அனுப்பனும். அவர் என்ன நினைக்குறாருனு தெரியல – கோலி ஓபன்டாக்

Kohli-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரரான ஏ பி டி வில்லியர்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இணைந்து விளையாடி வருகின்றனர். அந்த அணியின் முக்கிய தூண்களாக பார்க்கப்படும் இந்த இரு வீரர்களை சார்ந்து தான் அந்த அணி பெரும்பாலும் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் பொருத்தவரை தனது பல்வேறு அதிரடி ஷாட்களின் மூலம் ஏபி டிவிலியர்ஸ் ரசிகர்களிடம் மிகவும் பரிச்சயமானவர்.

nattu

- Advertisement -

அதேபோன்று உலக அளவில் தனது அசுரவேக ரன் குவிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் கோலி இவர்கள் இருவரும் தரமான பேட்ஸ்மேன்கள் என்பதில் சந்தகமில்லை. மேலும் அவர்களுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையிலும் குறை இல்லை. எப்பொழுதுமே கிரிக்கெட்டில் பல்வேறு புதிய புதிய ஷாட்களை விளையாடி வரும் ஏபி டிவிலியர்ஸ் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் போன்றே ஒரு ஷாட்டை அடித்து விராட் கோலி ஆச்சரியப்படுத்தினார்.

வேகப்பந்துவீச்சாளர் எதிராக முட்டி போட்டு ஸ்கூப் ஷாட் அடிப்பது ஏபி டிவில்லியர்ஸ் இன் ஸ்டைல் நேற்றைய போட்டியில் அதேபோன்ற ஷாட்டை விராட் கோலி விளையாடினார் .பெரும்பாலும் ப்ராப்பர் கிரிக்கெட் ஷாட் விளையாடும் கோலி இதுபோன்ற ஷாட்டுகளை விளையாடுவதில்லை. இருப்பினும் நேற்றைய போட்டியில் அவர் விளையாடிய விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுமட்டுமின்றி வர்ணனையாளர்கள் அந்த ஷார்ட் குறித்து பெரிதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

pandya

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : டி20 போட்டிகளில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். இந்த போட்டியில் மிகப்பெரிய இரண்டு வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெற்றிருப்பது சிறப்பான உணர்வைத் தருகிறது. அனைவரும் தற்போது ஐபிஎல்லில் 14 போட்டிகளில் விளையாடி விட்டு வந்து இருக்கிறோம். அதனால் எங்களுடைய திட்டங்கள் சரியாக இருக்கின்றன.

- Advertisement -

இந்த போட்டியில் நான் ஏ.பி.டி போன்று ஒரு ஸ்கூப் ஷாட்டை விளையாடினேன். எனக்கே இந்த ஷாட் விளையாடியது சர்பிரைஸ்ஸாக இருந்தது. போட்டி முடிந்து இதுகுறித்து ஏ.பி க்கு மெசேஜ் செய்ய உள்ளேன். அவர் என்ன நினைக்குறாரு என்று தெரியவேண்டும் என கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

kohli 2

நடராஜன் மீண்டும் இந்த போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஷர்துல் தாகூரும் சிறப்பாக வீசினார். ஹர்திக் பாண்டியா இந்த போட்டியை சிறப்பாக முடித்து கொடுத்தார். ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கம் அமைத்தார். இது ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக எங்களுக்கு கிடைத்த வெற்றி அடுத்த போட்டியும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்திய அணியில் தற்போது நல்ல சூழல் இருந்து வருவதாக கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement