ராகுல் அவுட் ஆனதும் நானும் ரோஹித்தும் பேசினது இதுதான். இதுவே வெற்றிக்கு காரணம் – கோலி பெருமிதம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 286 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Smith

- Advertisement -

அதன்பிறகு 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் 119 ரன்களையும், கோலி 89 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக ரோஹித்தும் தொடர் நாயகனாக கோலியும் அறிவிக்கப்பட்டனர்.

வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : நாங்கள் சற்று அனுபவம் வாய்ந்தவர்கள் ரோஹித் மற்றும் நானும் எங்கள் அனுபவத்தை இந்த போட்டியில் வெளிக்கொணர்ந்தொம். தவானின் பங்களிப்பு இதில் தவறியது இந்த போட்டியிலும் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் அதனை எப்போதும் அமைத்து தருவார்கள்.

ராகுல் ஆட்டமிழந்து வெளியேறியபோது ஒரு பதட்டமான சூழ்நிலை இருந்தது. ஏனெனில் பந்து சற்று நின்று திரும்பி வந்தது. இங்கே தான் எங்களது அனுபவம் எங்களுக்கு கைகொடுத்தது நாங்கள் எங்களது பார்ட்னர்ஷிப் அமைக்கும் முன் விக்கெட்டை இழக்கக்கூடாது 7 முதல் 8 ரன்களை ஒவ்வொரு ஓவரிலும் அடித்து செல்லலாம் என்று பேசிக்கொண்டோம்.

Rohith-2

நாங்கள் எதை நினைத்தோமோ அதை செய்வதற்கான ஸ்கில் எங்களிடம் இருந்தது. ரோகித் அருமையாக விளையாடினார் நாங்கள் இருவரும் கடந்த 4-5 வருடங்களாக இவ்வாறு விளையாடி வருகிறோம். எங்கள் இருவரில் ஒருவர் கடைசி வரை போட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம் இந்த வெற்றி எங்களுக்கு திருப்தியாக அமைந்தது என்று கோலி பேசினார்.

Advertisement