இவருக்கு வயதாகிவிட்டது. இவர்களுக்கு பதில் சீக்கிரம் புதுசா வீரர்களை கண்டு பிடிக்கனும் – கோலி புது பிளான்

- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை இழந்தது அடுத்தடுத்த இந்த தோல்விகளினால் இந்திய அணி தற்போது இன்னல்களை சந்தித்து வருகிறது,
இந்நிலையில் தற்போது அதற்கு மேல் கருத்து கூறும் அளவிற்கு இன்னொரு விடயத்தை இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Bumrah-1

- Advertisement -

அதன்படி விரைவில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு பும்ரா தலைமை தாங்குவார் என்றும் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தற்போது பந்துவீச்சில் உச்சத்தில் இருந்தாலும் அடுத்த வேகப்பந்து வீச்சாளர்களை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்போதிலிருந்து அடுத்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேடல் துவங்க இருக்கிறது என்றும் இப்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர்களுக்கான மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வயதாகிக் கொண்டு வருவதால் டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆகியவற்றில் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் இரண்டு மூன்று புதிய வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க விரும்புவதாக தெரிகிறது. மேலும் அடுத்த கட்டத்துக்கான வேகப்பந்து வீச்சாளர்களில் நவ்தீப் சைனி தற்போது உருவாகி விட்டார் என்றும் அவர் இந்திய அணியில் விளையாட தயாராக இருக்கிறார்.

Ishanth

அதுமட்டுமின்றி மேலும் கூடுதலாக பந்துவீச்சாளர்களை இந்திய அணி பார்த்து வருகிறது. இதனால் இளம்வீரர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். சமீபத்தில் கிடைத்த வெற்றி எல்லாம் போல வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் கிடைத்ததால் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு இந்திய அணி தற்போது செல்ல உள்ளது.

Umesh 3

உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் பந்துவீச்சு தரநிலை சிறப்பாக இருந்தாலும் வருங்காலத்தை யோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படி கோலி திடீரென ஏன் பேசினார் என்பது புரியவில்லை இருப்பினும் அடுத்த டெஸ்ட் அழைப்புக்காக இளம் வீரர்கள் பலர் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement