என்ன ஒரு கோழைத்தனமான செயல். அந்த யானை என்ன பாவம் செய்தது – கொதித்தெழுந்த கோலி

Kohli
- Advertisement -

கேரள மாநிலத்தில் எப்போதுமே யானைகள் மீட்பு தனி பாசம் வைத்து அம்மாநில மக்கள் வளர்த்து வருவார்கள் என்பது நாம் அறிந்ததே. கோயில் திருவிழாக்களில் யானைக்கன்று ஒரு சிறப்பிடம் உண்டு அதற்காக பிரத்யேக பூஜையும், வழிபாடுகளும் நடைபெறுவது இதற்கான ஒரு சான்று. யானைகளை கடவுளுக்கு நிகராக மதிக்கும் கேரள மாநிலத்தில் குருவாயூர் மாவட்ட மக்கள் அதற்கென தனி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

Ele

- Advertisement -

மேலும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் யானைகளை குழந்தைகள் போல பராமரித்து வருகின்றனர். இப்படி யானைகள் மீது அதிக பாசமும் அன்பும் கொண்ட மக்கள் மீது தற்போது பெரும் பழி விழுந்திருக்கிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வனப்பகுதியில் யானை ஒன்று பசியுடன் ஊருக்கு வந்துள்ளது.

பசியுடன் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த அந்த யானை மனிதர்கள் யாரையும் தாக்காமல் அவர்கள் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு வந்தது. இந்நிலையில் கருவுற்ற அந்த யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட யானை சிறிது நேரத்திலேயே அதன் வாயில் இருந்த வெடி மருந்து வெடித்திருக்கிறது.

Ele 1

இதனால் நாக்கு மற்றும் வாய்ப் பகுதியில் பலத்த காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடி உள்ளது. அப்படி வலியுடன் யானை பதறி ஓடிய போதும் எந்த மனிதரையும் தாக்கவில்லை. எந்த ஒரு வீட்டையும் செத்தப்படுத்தவில்லை. அந்த யானை மேலும் வலி தாங்க முடியாமல் பசித்த போதும் அதனால் எதையும் உண்ண முடியாமலும் படாதபாடுபட்டு பிறகு இறுதியில் ஆற்றில் இறங்கி நின்று உள்ளது.

- Advertisement -

இதனை அறிந்த வனத்துறையினர் அங்கே வந்து யானையை மீட்க முயற்சி சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை மீட்டனர். ஆனாலும் யானை அதன்பிறகு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் இறந்த பின்னர் பிரேத பரிசோதனையில் அந்த யானை ஒரு குழந்தையை தனது கருப்பையில் வைத்திருந்தது தெரியவந்தது.

தற்போது இந்த யானை குறித்த தகவல் எலிபன்ட் என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கொடூரமான செயலுக்கு திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வன விலங்கு நல ஆர்வலர்கள் என அனைவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் மனித நேயம் எங்கே என்ற கேள்வியுடன் #RIP Humanity என்று ஒரு ஹேஸ்டேக் ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அந்த பதிவில் கேரளாவில் என்ன நடந்தது என்று கேட்டதை நினைத்து திகைத்துப் போனேன். நாம் வனவிலங்குகளை அன்போடு நடத்துவோம் இந்த கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement